Showing posts with label srilankanews. Show all posts


இறக்காமம் Vocational Training Center -தொழிற் பயிற்சி நிலையம் கட்டட அடிக்கல் நாட்டு விழா நேற்று  29-07-2017  காலை10.00 மணியளவில் இறக்காமப் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் நசீர் தலமையில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

 இறக்காமப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இறக்காமம்,வருப்பத்தாஞ்சேனை,வாங்காமம் 10A/11A கிராமம், நீகுன, இலுக்குச்சேனை, நல்லதன்னி மலை, மாணிக்கம்மடூ, குடுவில் ஆகிய கிராமங்களின் இளைஞர்கள், யுவதிகளின் தொழில் நுட்ப தொழில் வாய்ப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் தேவை கருதி இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் ,தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகான அமைப்பாளர்,முன்னாள் கடற்படைப் பிரிவு பொறியியலாளர் ஸெயீத் இஷ்ஹாக் மன்சூர் அவர்களின் அயராத முயற்சியினால் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்  குழுவில் எமது இளைஞர்களின் தொழில் நுட்ப/தொழில் அனுபவக் கல்வித் தேவை கருதி பல வாத விவாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் தனது ஆளுமையைப் பயண்படுத்திக்கொண்டு இந்த Vocational Training Center கட்டிடம் அமைப்பதற்காக ONUR Project மற்றும் RIDP project  மொத்தமாக 6.75 மில்லியன் வேலைத்திட்டத்தின் நிதியுதவியை எமது மக்களுக்கு பயண்படக்கூடிய திறம்பட தூரநோக்குடன் சிந்தித்து பெற்றுக் கொடுத்தது என்பது இறக்காமம்  பிரதேச மக்கள் அறிந்திருக்க வேண்டிய விடயம் இறக்காப் பிரதேச கல்விச் சேவைகளின் பிரதி பலிப்புக்கு சாலச் சிறந்த விடயமாகும்.

இந்தக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு இறக்காமம் பிரதேச செயலக செயலாளர் அல்ஹாஜ் நசீர் தலமையில் விசேட பிரதம அதீதியாக SLMC அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் M.I.M.மன்சூர் mp மற்றும் அதீதிகளாக இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் பொறியியலாளர் ஸெயீத் இஷ்ஹாக் மன்சூர்,பிரதி பிரதேச செயலாளர் நயீஜா முஷாபிர்,அம்பாரை மாவட்டத் திட்டமிடல் பனிப்பாளர் அன்வர் டீன்,தேசிய நல்லிணக்க உதவிப் பனிப்பாளர் திரு நிஹால் ஸ்ரீ ஏக்க நாயக்க,அம்பாரை மாவட்ட NAITA நிறுவன முகாமையாளர் ஆலிதீன் மசூர்,முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜபீர் மௌலவி மற்றும் பல ஊர் பிரமுகர்கள் எல்லோரும் பிரச
ன்னமாயிருந்து இறக்காமப் பிரதேச இளைஞர்களின் காலத்தின் தேவைக்கேற்ப அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்
றிஸ்வான் அபூபக்கர்,
இறக்காமம்
-ஏ: ஆர் பரீல் -

அண்மையில் ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கள வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த ஹிக்கடுவ கல்வி வலய பிரிவின் ரமலான் நிகழ்வு ஒன்றுக்கு கின்தொட்ட சாஹிரா பாடசாலை  முஸ்லிம். மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலய மாணவர்கள் நிகழ்வுகளுக்கு வருகை தந்தால் பாடசா லையிலுள்ள புத்தர் சிலைக்கு மலர் சமர்ப்பித்து வணங்க வேண்டுமென பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோரும் நிபந்தனை
விதித்துள்ளனர்.

இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கும், பழைய மாணவர்களுக் குமிடையில் கருத்து வேறுபாடு நில வியதால் அங்கு பதற்ற நிலையொன்று உருவாகியது.

ஸ்ரீ சுமங்கல பாடசாலையில் இவ்வா றான நிகழ்வு இதற்கு முன்பு நடத்தப் படவில்லை.

ஹிக்கடுவ ஸ்ரீரீ சுமங்கல தேரர் நிறுவிய இப்பாடசாலையில் இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட முடியாது. இங்கு வெசாக் பண்டிகை நிகழ்வோ, புத்தாண்டு நிகழ்வோ இதுவரை நடாத்தப்பட வில்லை என பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான ஒன் றுகூடல் நிகழ்வு பற்றி எட்டாம் தர பாட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமையவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிபர் தெரிவித்தார்.

 பழைய மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக குறிப்பிட்ட விழா விற்கு சமூகமளிக்க வேண்டாமென கிந்தோட்டை ஸாஹிரா பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்ரீமங்கல மகா வித்தியாலய அதிபர்
ஜி.எச்.மொஹொட்டி அறிவித்தார்.

இதனையடுத்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஏனைய 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு முஸ்லிம் கலாசார விழாவாக நடைபெற்றது.

இதில் கிந்தோட்டை ஸாஹிரா மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
(படம் : அடையாளப்படம் )


பதுளை, தியத்தலாவ பிரதேசத்தில் இயங்கி வந்த போலியான அமெரிக்க டொலர்களை அச்சிடும் இடம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், இன்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கறுப்பு நிற கடதாசியில் அச்சிட்டப் பின்னர், இரசாயனம் ஒன்றை சேர்த்ததும் அது டொலராக மாறும் என சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

போலி டொலர்களை அச்சிடும் இடத்தில் இருந்து 5 ஆயிரத்து 200 காகிதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார்.

சிரியாவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் அஹமட் தாஜூடீன் என்ற இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார்.

சிரியாவின் ரக்கா நகரில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய இவர், துருக்கியின் ஊடாக சிரியாவிற்குள் பிரவேசித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கேகாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சார்பில் போராடி உயிரிழந்திருந்தார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சிலர் மக்காவிற்கு செல்வதாகக் கூறி, சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


லஞ்சம் உட்பட 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் கடுமையான வேலையுடன் கூடிய 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ஹேரத் முதியன்செலாகே உதய ஹேரத் என்பவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அவர் காணாமல் போன நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காக உறவினரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 8 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சுகையீனம் காரணமாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தனது பதவியை இராஜினா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, பொலிஸ் அத்தியட்சகர்: ருவான் குணசேகர கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது


ஞானசார பிணையில் விடுதலை. விடுக்கப்பட்டிருந்த பிடிவிறாந்துகள் அத்தனையும் வாபஸ்.

இதிலுள்ள செய்தி மிகத்தெளிவானது:
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான
அனைத்து வன்முறைகளும்  அனுமதிக்கப்படும்.

இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளிலெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்: இந்தியாவில், பாகிஸ்தானில், மியன்மாரில், பங்களாதேஷில். பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

இந்த இஸ்லாமிய விரோதத் தீ இலங்கை முஸ்லிம்களையும் விட்டுவைக்காது என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல்  நம்மவர்கள் பலர் இருக்கின்றார்கள் .

நாம் எப்படியும் அதை அணைப்போம் என்று
பிரக்ஞை கொண்ட சிலரையும்
அரசியல்வாதிகள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் .

சமூகமே! நீ கிரிக்கெட்டில் காட்டுகின்ற ஆர்வத்தில் பாதியையாவது சூழ்ந்துவரும் இந்த ஆபத்தில் காட்டு.

நட்சத்திர உலமாக்களையும் அரசியல்வாதிகளையும் நம்பாதே!

இன்றைய அமைச்சர் ரணவக்க நேற்று பேசிய ஒரு பேச்சைக் கேட்டேன். அவருடைய வாயிலிருந்து வெறுப்பு வடிக்கிறது. ஒவ்வொரு கையசைவிலும் கண்ணசைவிலும் இரத்த வேட்கை தெரிகின்றது.

பிரித்தானியாவின் நீல் பராஜையும், ஒல்லாந்தின் கீர்ட் வில்டேர்சையும் உதாரணம் காட்டி இங்குள்ள பொது பலசேனாவின் இருப்பை நியாயப்படுத்துகின்றார்.

குஜராத்தின் "புச்சர்" மோடியின் தெரிவிலே பிராந்தியத்தின் பாதுகாப்பைக் காண்கின்றார்.

கண்டங்கள் கடந்து வாழும் போகோ ஹராத்துடன் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துவரும் மார்க்கப்பற்றை இணைக்கின்றார்.

இவரைப் போன்றோரின் வார்த்தைகளால் உந்தப்பட்டோர்தான் நாளை இந்த நாட்டில்  இரத்தத்தை ஓட்டுவார்கள்.

இரத்தம் சிந்தப்படுகின்ற அந்த நேரம் அதைத்தடுக்கும் சக்தி நம்மிடம் இருக்காது.

ஆனால், அமைச்சர் ரணவக்க போன்றோரின் இன்றைய வெறுப்பு வார்த்தைகளை வலிமை இழக்கச்செய்கின்ற, அதனை அணைக்கின்ற சக்தி எமக்கு உண்டு. அதை நாம் இன்று மாத்திரமே செய்யலாம்; நாளை செய்யமுடியாது. நாளை நாம் தாங்க முடியாத வலியிலே ஓலமிட்டுக்கொண்டிருப்போம்.

உலக அரசியல் பற்றிய விழிப்புனர்வு எதுவுமின்றி, சுற்றியுள்ள சக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய எந்த அக்கறையுமின்றி அமைச்சர் ரணவக்க போன்றோரின் வெறுப்புப் பேச்சை எம்மால் எதிர்கொள்ள முடியாது.

நாங்கள் இதைச் சொல்லும்போது, பலர் எம்மைக் கேலி செய்வார்கள்; இன்னும் பலர் எம்மைப் புறக்கணிப்பார்கள்; இன்னும் பலர் எம்மைப் போட்டுக்கொடுக்க முனைவார்கள்.

ஒரு சிலர் மாத்திரம் நாம் சொல்லுகின்ற இந்தக் கருத்தைக் கிரகிப்பார்கள்; அதிலுள்ள நியாயங்களை காண்பார்கள். அவர்களிலும் மிகச்  சிலர் மாத்திரம் இயக்க நிலைக்கு வருவார்கள்.

அந்தச் சிலரின் அறிவியல் ரீதியான, சாத்வீகமான, நிதானமான அந்தச் செயற்பாடுகள் மாத்திரமே எம்மைச்சுற்றி அடர்ந்தேறி வரும் அந்த இனவாதத்தீயையும்  அதன் தவிர்க்கமுடியாத விளைவான இரத்தவோட்டத்தையும் தவிர்க்கும் சக்தி பெற்றன.

இந்தச் சின்னக் கூட்டம் தோற்கின்ற போது ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகமுமே தோற்றுப்போய் நிற்கும்.

முஹம்மட் பைஸல்


பங்களாதேஷில் இலங்கை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷின் சிட்டங்கொங்கில்,  உள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குறித்த இலங்கை யுவதி கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில், அவரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுபவர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்ஷி பகுதியில் உள்ள குல்ஷி மார்ட் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் நிர்வாக அதரிகாரியான 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குல்ஷி பகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து தாம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட யுவதி குல்ஷி காவல்துறையில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கட்டாரில் உள்ள இலங்கையர்களை தேவை ஏற்படின் உடனடியாக வெளியேற்றும் பொருட்டு தேவையான அவசர பயண ஆவணங்களை தயாரிக்கும் பணியினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்டாருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எஸ்.பி. லியனகே கருத்து தெரிவிக்கையில்,

வளை குடாவில் தற்போது நிலவும் இராஜதந்திர ரீதியான முறுகல் நிலையானது, மோதலாக மாறும் சாத்தியக்கூறுகள் இல்லாத போதிலும், தேவை ஏற்படின் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களை வெளியேற்றுவதற்குமான பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான இலங்கையர்கள் கட்டாரில் பணிபுரிந்தும், வசித்தும் வருகின்றனர்.

அவசர தேவையின் பொருட்டு , அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகமானது, இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இவ் ஆவண தயாரிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதிகமான இலங்கைப் பணியாளர்களின் கடவுச்சீட்டுக்கள், தொழில் வழங்குனர்களிடம் உள்ளமையால், அவசர தேவை கருதியே இவ் ஆவணத் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களிலிருந்து இலங்கை கைத்தொலைபேசிகளுக்கு அனாமேதய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் இது குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்கும்படியும் வேண்டப்பட்டுள்ளது.

+17615027697 , +17675021986 , +17675022948 மற்றும் பல +1767502 என ஆரம்பிக்கும் இலக்கங்களிலிருந்தே இவ்வாறு மிஸ்ட் கோல்கள் வருவதாகவும் அதனை மீள அழைக்குமிடத்தும் பெருந்தொகை சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் பலர் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் தொலைத்தொடர்பு அமைச்சு இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் இது குறித்து தீவிரமாக ஆராய்வதாகவும் அறியமுடிகிறது.

குறித்த அழைப்புகள் பெரும்பாலும் சில விநாடிகளுக்குள் துண்டிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த புதிய கடவுச்சீட்டை அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கடவுச்சீட்டு 2003ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கடவுச்சீட்டு அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும்.

இந்த நிலையில் புதிய கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் எம்.எம்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.


பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர்க்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். (இத் திடீர் இடமாற்றத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.)

இவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 3 பேர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர் ஆகியோருக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலங்கையர் ஒருவர், குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் உள்ள Ardiya பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த இலங்கையர், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து புகலிடம் கோரி குவைத் வந்துள்ளார் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அதிகூடிய உயிர்களைப் பறிகொடுத்த ஒரு அனர்த்தமாக அண்மைய வெள்ளம் காணப்படுகின்றது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று நண்பகல்வரையில் 203 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுனாமியில் 30 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். 5400 பேர் காணாமல் போயினர். அரநாயக்க சாமரகந்தையில் ஏற்பட்ட மண்சரிவில் 27 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காணாமல் போனதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.(யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும், வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்களுக்கு பலத்த ஆறுதலைத் தந்துள்ளது.

இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுக்குரியவைகள்.

தாய்க்கு ஈடாகப் பால் தரும் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்ற பண்பாடு இந்து சமயத்தில் உண்டு.

பசுவின் பால் உலகுவாழ் மக்களின் நிறை உணவு. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பசுப்பாலை அருந்துகின்றனர்.

தவிர சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவப்பரம்பொருளின் வாகனமாக எருது விளங்குகின்றது. தவிர இந்து சமயத்தவர்கள் அணியும் திருநீறு பசுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.

ஆக, பசுக்களும் எருதுகளும் இந்து சமயப் பண்பாட்டில் தெய்வத்தின் இரண்டாம் நிலை கொண்டவை என்று கருதப்படுபவை.

இந்நிலையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதென்பது மிகப்பெரும் பாவம்.

அதிலும் ஞானபூமியாக விளங்கும் பாரத பூமியில் பசுக்கள், எருதுகள் இறைச்சிக்காக வெட்டப் படுவதென்பது பாரத பூமியின் பெருமைக்கும் அதன் கண்ணுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கும் இழுக்காகும்.

இந்நிலையில் இந்தியா எங்கும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மன நிம்மதியைத் தருகின்றது.

இந்தியா எடுத்த இந்த முடிவு இலங்கையிலும் எடுக்கப்பட வேண்டும்.

சிவபூமி என்று போற்றப்படும் இலங்கை சிவ பக்தனான இராவணேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்டது.

அந்த வகையில் இலங்காபுரி தெய்வீக சக்தி கொண்ட நாடு.எனினும் மனிதவதைகளும் மிருக பலிகளுமாக எங்கள் நாட்டின் தெய்வீகத் தன்மை தேய்ந்து நலிந்து செயலிழக்கலாயிற்று.

இத்தகைய நிலைமையில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.

அதில் ஒன்று, மனித வதைகள் இல்லாது போவதுடன் இந்து மக்கள் போற்றி வணங்கும் பசுக்களின் வதையும் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இது ஒரு விசேட ஏற்பாடன்று.ஆமை பிடிப்பதற்கு தடை, உடும்பைக் கொல்வதற்குத் தடை என்ற சட்டங்கள், அவை பெளத்த மதத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் ஏற்படுத்தப்பட்டவை.

இதுபோலத்தான் பசுக்கள், எருதுகள் இந்து மக்களின் வழிபாட்டுடன் தொடர்புபட்டவை.

தவிர, பசுக்கள் தரும் பாலை நாம் பருகுவதால் பசுக்கள் நமக்குப் பால் தந்து கோமாதா என்ற உயர்ஸ்தானத்தைப் பெற்று விடுகின்றது.

ஆகையால் மதம், இனம், மொழி என்ற பேதம் கடந்து மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

ஆம், இந்தியப் பிரதமர் மோடியின் அறிவிப்புப் போல எங்கள் நாட்டிலும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.


களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய - மொரவகந்த மற்றும் களுத்துறை - புளத்சிங்கள - போகஹவத்த - தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING:சற்றுமுன் மாவனல்லையில் கட்டட நிர்மாண பணியின்போது மண் சரிவு!

ஒருவர் பலி!

மேலும் சிலர் மண்சரிவில் சிக்குண்டுள்ளதாக தகவல்.

மீட்பு பணி ஆரம்பம்.

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 154.54 ரூபாயாக பதிவாகியுள்ளது.


இலங்கையர்கள் சிலர் சிரியாவுக்கு சென்று ஐ.ஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 50 முதல் 60 பேர் இவ்வாறு ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த அதிகமானோரே இவ்வாறு இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக வெளிநாடு ஒன்றில் இருந்து வருகைதந்த குழுவினர், ஐ.எஸ் அமைப்பு தொடர்பான பட்டறை ஒன்று நடத்தியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து இலங்கையர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது. அதற்கான ஆதாரங்களும் வெளியிட்டிருந்தது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கண்டியை சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்காவின் வான் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் இணையத்தளம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலாளர் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த ஹெக்கர் குழுவினரால் குறித்த இணைத்தளத்தை முடக்கியதன் பின்னர் அதில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதில் காஷ்மீர், சிரியா மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் விடுவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் பிலால் என்ற குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

MARI themes

Powered by Blogger.