Showing posts with label viduthalainews. Show all posts


அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம், கல்வி ஆகியனவற்றை இல்லாமல் அழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பண்டைய அரசர்கள் அரச திறைசேரியின் சொத்துக்களை மாநாயக்க தேரர்களுக்கு பூஜையிட்டனர். தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த உரிமைகளை கொள்ளையிட முயற்சிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் அரச சொத்துக்களை மிகவும் இழிவான முறையில் கொள்ளையிட முயற்சிக்கின்றது.

நாட்டின் பிரதான பிரச்சினை ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல.

கலாச்சார, சமய மற்றும் தேசிய பிரச்சினைகள் பல எழுந்துள்ளன, இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்துவதற்கு பதிலாக அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்ட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனின் Bethnal Green என்ற பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த கட்டடத்தில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்ற நிலையில், அந்த புகையை சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

28 வயதான Rosie Amies என்ற பெண்ணே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 72 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பத்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டடத்தின் கூரை வரை பரவியுள்ளது.

எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமானது தற்போது அரசு மீது பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை மாணவர்களின் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் இலாபநோக்கச் செயற்பாடுகள் உண்டு என அரசு தரப்பு அமைச்சர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு எதிரான மற்றுமொரு தரப்பு, மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை முன்வைத்து அரசின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொண்டமையினாலேயே தாக்கப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் வெளியாகி உள்ள காணொளியில் சுகாதார அமைச்சுக்குள் மாணவர்கள் அத்து மீறி நுழைய முற்பட்டுள்ளமை தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சின் வாயிலை மாணவ கும்பல் அடித்து உடைத்து உள் நுழைய முற்பட்டுள்ளனர். அமைச்சரையும் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்புக் கம்பிகள் கொண்டு வாயிற் படலையை (கேட்) உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது “தீர்வு தராவிட்டால் அடித்து நொருக்குவோம்.. எங்கே ராஜித இப்போதே வரச்சொல்லுங்கள்... இல்லாவிட்டால் உடைப்போம்” என மாணவர்கள் கடுமையான தொணியில் எச்சரிக்கை விடுப்பதும் பதிவாகி உள்ளது.

அதன் பின்னர் மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததன் பின்னரே பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனடிப்படையில் மாணவர்கள் மீதே தவறு உள்ளது எனவும் கூறப்படுகின்றது.


இதேவேளை சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது அரசுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும், இந்தப்பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் வைத்தியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதன் பின்னணியிலும் அரசியல் தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் இனவாதப்பிரச்சினை சற்று அடக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் போராட்டங்கள் பாரிய அளவில் அரசுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அம்பாரை 'தயா அப்ரல்' ஆடைத் தொழிச்சாலையில் பணிபுரியும் சுமார் 20 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தொழில் புரிந்து வரும் வேளையில் இவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில்
ஒரு மணித்தியாலயம் ஜும்மா தொழுகைக்காக செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அங்கு பணிபுரியும் இளைஞசர்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தயா அமைச்சரினால் இறக்காமம் மாயாகல்லி மலையில் சிலை வைத்ததாகவும் இறக்காமம் முஸ்லிம் மக்களால் நம்பிக்கை இளந்த ஒரு அமைச்சராகவும் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-றிஸ்வான் அபூபக்கர்-


டெல்லியில் தந்தை ஒருவர் பேய் கட்டளையிட்டதாக கூறி மூன்று வயது குழந்தையின் காதுகளை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்ரித் பஹதூர் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், அவரின் கனவில் பேய் ஒன்று தோன்றியதாகவும், அந்த பேய் அவரது 3வயது பெண் குழந்தையின் காதுகளை காவு கேட்டதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து குழந்தையின் இரண்டு காதுகளையும் அம்ரித் பஹதூர் வெட்டி எடுத்துள்ளார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மீதும் அம்ரித் பஹதூர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து குழந்தையின் தாய் மற்றும் குழந்தையின் அலறல் சப்தம் கேட்ட அண்டை வீட்டுக்காரர்கள், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெற்ற குழந்தையின் காதை அறுத்த கொடூர தந்தையை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இலங்கை முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக ஈடுபட்டுவரும் கலகொட அத்தே ஞானசார தேரர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினாலும் இலங்கையில் வேரூன்றி காணப்படும் இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது கடினமான காரியமாகும்.

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து முஸ்லிம்களுடைய பாதுகாப்பு, இருப்பு என்பன போன்ற விடயங்களை நிரந்தரமாக்கிக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன்வராத வரையில் இந்த நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

குறுகிய காலத்திற்குள் முஸ்லிம் அரசியலில் கால்பதிக்க வேண்டும் என சில அரசியல்வாதிகள் கட்சிகளை ஆரம்பித்து முஸ்லிம்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து சிங்கள,தமிழ் முஸ்லிம் என பாகுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி தங்களுடைய அரசியல் அடையாளத்தை பெற முயற்சிப்பவர்களுக்கு பின்னால் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணித்தால் பயணத்தின் இறுதியில் மரணக்குழியில் விழும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த அதிகார நோய்பிடித்தவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தமிழ் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை, என்றாலும் கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பிரிந்து நின்றதன் பாரதூரமான விளைவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாடமாகவும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் சிங்கள சமூகத்திற்கு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது.

சகவாழ்வு, சமாதானம் என்பவற்றை நாட்டின் மூவின மக்கள் நேசித்தாலும் அதை இனவாத கட்சிகளின் தலைமைகள் விரும்பாதவரையில், அந்த கட்சிகளை சமூகங்கள் நிராகரிக்காத வரையில் நிரந்தர சமாதானம் என்பது கனவு வார்த்தைதான் என்பதை அனைத்து சமூகங்களும் நினைவில் கொள்ளவேண்டும்.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்நாட்டின் எதிர்கட்சி அரசியல் அர்த்தமற்று போனது என்பதே உண்மையாகும், பிச்சைக்காரனுக்கு புண் எவ்வாறானதொரு மூலதனமோ அதே போல் அரசியல்வாதிகளுக்கு சமூகங்களுக்கு இடையிலான பிளவு அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
எப்போதாவது ஆட்சி மாறும் என்ற கனவுகளுடன் இருந்த எதிர்கட்சி அரசியல் தலைவர்களில் ஒருவரான, தற்போதைய பிரதமர் அவர்களின் வழமையான சிந்தனையே ஞானசார தேரர் என்ற கடும் போக்குவாதியை உருவாக்கியது, அதன் மூலமாக சிங்கள பெரும்பான்மை மக்களை தூண்டிவிட்டு சிறுபான்மை இனத்தை சீண்டுவதனால்  இன ஐக்கியத்தை கேள்விக்குற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாம் என்பதும் அதற்காக துணைபோனவர்கள் அவருடைய அரசாங்கத்தில் தற்சமயம் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தங்களுடைய அரசியல் அந்தஸ்தை இழக்கவிடாமல் பாதுகாக்கும் ஞானசார தேரரையும், அவருடைய அட்டகாசங்கள் அனைத்துக்கும் அனுமதி வழங்கி பாதுகாப்பவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்துக் கிடப்பது முட்டாள்தனமாகும்.

ஞானசார தேரர் அவர்கள் தாமாகவே முன்வந்து  புனித இஸ்லாத்தை ஏற்றாலும் தற்போதைய அதே சவால்களை ஓராயிரம்ஞானசாராக்களை உருவாக்கவும் அவர்களை வைத்து இனவாதத்தை தொடரும் சிந்தனை கொண்ட அரசியல் தலைவராக ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் இருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, அல்லது எதிர்கட்சி தலைவராக அல்லது ஆட்சியாளராக, அவர் எந்த தரப்பில் இருந்தாலும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் மலராது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அரசியல் அடையாளத்துடன் இருக்கும் வரையில் இந்த நாட்டில் இனவாதம் என்ற வாசகம், இலங்கை அரசியலில் நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அப்படிப்பட்ட ஒருவருடைய நிகழ்ச்சி நிரல்களுக்கு விலைபோன சிறுபான்மை இனவாத கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் இருப்பே வேண்டி அவருடைய வாடி வீட்டில் குடியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டு அவர்களை அரசியலில் இருந்து தூரப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம்கள் வேண்டி நிற்கும் சகவாழ்வு சமாதானம் நீடிக்கும்

அஹமட் புர்க்கான்
கல்முனை


கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் மக்களை அடக்கி வாழ நினைத்த விடுதலை புலிகள்  முள்ளிவாய்க்காலில் தனது தவறை உணர்ந்து விட்டனர்  அதனால் எதிர்காலத்தில்  இரு சமுதாயமும் ஒற்றுமையாக வாழ்வதேயே இன்று அவர்கள் விரும்புகின்றனர்.

அதுபோல் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சி கால அலுத்கமயில் நடைபெற்ற சம்பவத்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது தவறை உணர்ந்து விட்டார். அதனால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் அவர்களுடன் இனஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

மேற்குறிப்பிட்ட இருவராலும் இனி முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏஏற்படாது என்பது தற்போதைய அவர்களின் நடைமுறையில் காணப்படுகின்றன அதில் சந்தேகமில்லை அதனால் இன்று நாட்டு மக்கள் விரும்பிய  நல்லாச்சி எதிர்வரும் தேர்தல்களில் மஹிந்தயின் மக்கள் ஆட்சியாக மாறும் அரசியல் நிலமையே காணப்படுகின்றன.

விடுதலை புலிகள் மற்றும் மஹிந்த ராஜபக்ச இருவரும் முஸ்லிம்கள் மூலம் தோல்வி கண்டு அனுபவம் பெற்று தற்போது செய்த தவறை நினைத்து அழுகின்றனர். இதே போன்று தான் தற்போது நாட்டில் முஸ்லிம்களை பயமுறுத்தி அடக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி இருக்கும் ஞானசேராவும் மிக விரைவில் முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டு அழுது கொள்ள வேண்டிய நிலை வரும்.

ஜெமீல் அகமட்


ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ பொதுப‌ல‌சேனாவுக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்காம‌ல் இருந்த‌ வேளையில் அவ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் மௌன‌மாக‌ இருந்த‌ போது அவ‌ரை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்த‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌ அர‌சின் அமைச்ச‌ர்க‌ளான‌ விஜேதாச‌வும், ச‌ம்பிக்க‌வும் வெளிப்ப‌டையாக‌வே பொது ப‌ல‌சேனாவை ஆதரித்து பேசுவ‌து ம‌ட்டும‌ன்றி ப‌கிர‌ங்க‌மாக‌ உத‌வி செய்யும் போது முஸ்லிம் பொது ம‌க்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் மௌன‌மாக‌ இருக்கிறார்க‌ள் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.
இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து

முஸ்லிம் ச‌மூக‌த்துக்கெதிரான‌ இன‌வாத‌ம் என்ப‌து ம‌ஹிந்த‌வை வீழ்த்துவ‌த‌ற்காக‌வும் நாட்டில் நிலையான‌ ச‌மாதான‌ம் ஏற்ப‌ட்டுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வும், மோத‌ல்க‌ளை உருவாக்கி அதில் குளிர் காய‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வும் வெளிநாடுக‌ளின் பின்ன‌ணியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌தித்திட்ட‌மாகும். இத‌னை முன்னெடுத்த‌வ‌ர் ச‌ம்பிக்க‌ ர‌ண‌வ‌க்க‌ என்ப‌வ‌ரே.
முஸ்லிம்க‌ள் ப‌ற்றி பொய்யான‌ செய்திக‌ளை ப‌ர‌ப்பி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் முஸ்லிம்க‌ளை வெறுத்து அவ‌ர்க‌ள் ம‌த்தியில் முஸ்லிம்க‌ளை ப‌ற்றி தேவைய‌ற்ற‌ அச்ச‌த்தை தொட‌ர்ந்து ஏற்ப‌டுத்திய‌வ‌ர் இவ‌ராகும்.
முஸ்லிம் ப‌குதிக‌ளில் க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ இர‌வோடிர‌வாக‌ ஏதாவ‌து தொல்பொருளை வைத்து விட்டு அந்த‌ப்ப‌குதிக‌ள் தொல் பொருள் ஆய்வுக்குரிய‌வை என்ற‌ பிர‌ச்சார‌த்தை இவ‌ரே முன்னெடுத்தார்.

இவ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரே ஞான‌சார‌ தேர‌ர் என்ப‌தை அண்மையில் ச‌ம்பிக்க‌ ப‌கிர‌ங்க‌மாக‌ ஏற்றுக்கொண்டிருந்தார். அத்துட‌ன் பொது ப‌ல‌ சேனா சொல்வ‌து ச‌ரியான‌து என‌வும் கூறியிருந்தார். அவ‌ர‌து இக்கூற்றுக்கு ப‌தில் த‌ர‌க்கூட‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ ந‌ம‌து பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் உள்ளார்க‌ள். அதிலும் சிங்க‌ள‌ மொழியில் ந‌ன்கு உரையாற்ற‌க்கூடிய‌ ஹ‌க்கீம், முஜிபுர்ர‌ஹ்மான், ம‌ரிக்கார், க‌பீர் ஹாஷிம் போன்றோர் பெட்டிப்பாம்பாய் அட‌ங்கிப்போயுள்ள‌ன‌ர்.
இவ‌ர்க‌ள்தான் ம‌ஹிந்த‌ கால‌த்தில் அவ‌ர் பொது ப‌ல‌ சேனாவுக்கு மௌன‌மாக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்குகிறார் என‌ ப‌யில்வான் லேகிய‌ம் சாப்பிட்ட‌வ‌ர்க‌ள் போன்று எகிறிக்குதித்தார்க‌ள். இப்போது ச‌ம்பிக்க‌வும், விஜேதாச‌வும் ப‌கிர‌ங்க‌மாக‌வும், ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ மௌன‌மாக‌வும் பொது ப‌ல‌ சேனாவுக்கு ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கும் போது தூக்க‌ மாத்திரை சாப்பிட்ட‌வ‌ர் போன்று ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் உள்ள‌ன‌ர்.

ச‌ம்பிக்க‌வும், ஐ தே க‌வும் ஞான‌சார‌வுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ கார‌ண‌ம் அவ‌ர் மூல‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் இன‌வாத‌த்தை விதைத்து அவ‌ர்க‌ளை த‌ம் ப‌க்க‌ம் கொண்டு வ‌ர‌வும் இத‌ன் மூல‌ம் எதிர் வ‌ரும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் சிங்க‌ள‌ வாக்குக‌ளையும், ம‌ஹிந்த‌ அணி மீது  அச்ச‌ம் கொண்டுள்ள‌ முஸ்லிம் வாக்குக‌ள் எப்ப‌டியும் த‌ம‌க்கே கிடைக்கும் என்ப‌தால் அவ‌ற்றையும் பெற்று ச‌ம்பிக்க‌ போன்ற‌ யாராவ‌து இன‌வாதியை ஜ‌னாதிப‌தியாக்கும் எண்ண‌த்திலேயே காரிய‌ங்க‌ள் க‌ன‌க‌ச்சித‌மாக‌ ந‌டை பெறுகின்ற‌ன‌.
இந்த‌ நேர‌த்திலும் பொது ப‌ல‌ சேனாவை தாம் ஆத‌ரிப்ப‌தாக‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ இன்ன‌மும் வெளிப்ப‌டையாக‌ சொல்லாம‌ல் இருப்ப‌த‌ன் மூல‌ம் அவ‌ர் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் வாக்குக‌ளை இழ‌க்கின்றார் என்ப‌தை இவ‌ர்க‌ள் புரிந்து செய‌ற்ப‌டுகின்ற‌ன‌ர். எப்ப‌டித்தான் ம‌ஹிந்த‌ பொது ப‌ல‌ சேனாவுக்கு தான் ஆத‌ர‌வில்லை என்று சொன்னால் கூட‌ முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ அணிக்கு வாக்க‌ளிக்க‌மாட்டார்க‌ள் என்ப‌தை ஐ தே க‌ ஏஜ‌ன்டான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் மூல‌ம் அர‌சு புரிந்து கொண்டுள்ள‌து. ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ ம‌ஹிந்த‌வுக்கு வாக்க‌ளிக்காம‌ல் முஸ்லிம் காங்கிர‌சின் முட்டாள்த‌ன‌மான‌ பேச்சை கேட்டு ம‌ஹிந்த‌வை 2010 தேர்த‌லில் எதிர்த்து வாக்க‌ளித்த‌வ‌ர்க‌ள் என்ப‌தை புரிந்து வைத்துள்ளார்க‌ள்.
எம்மை பொறுத்த‌வ‌ரை இப்போது ம‌ஹிந்த‌ பொதுப‌ல‌சேனாவை ப‌கிர‌ங்க‌மாக‌ ஆத‌ரிக்க‌ வேண்டும். அப்போதுதான் ச‌ம்பிக்க‌, விஜேதாச‌, ர‌ணில் போன்றோருக்கு த‌ர்ம‌ ச‌ங்கட‌த்தை ஏற்ப‌டுத்தி த‌ம‌க்குரிய‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் வாக்குக‌ளையாவ‌து த‌க்க‌ வைக்க‌ முடியும்.


இறக்காமம் பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் தேவைகளாக காணப்பட்ட கிராமிய விவசாய துறைக்கு தேவையான பாலங்களை( எழு )சுமார் ஐந்து கோடி பெருமதியானவை இறக்காமம் அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பொறியிலாளரும் தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகாண அமைப்பாளர் மன்சூரின் தீவிர முயற்சியால் அமைக்கப்பட விருக்கிறது
இது தொடர்பில் மக்கள் மன்சூர் அவர்களின் சேவைகளை வாழ்த்தி வரவேற்கின்றனர்.

வரலாற்றில் விவசாய துறைக்கு மிகுந்த பணிகளை ஆற்றிவரும் இறக்காமம் பிரதேசம் பல அதிகாரம் பொருந்திய தலைவர்களினுடாக முயற்சி செய்தும் பலனற்று போன விடயங்கள் இணைத்தலைவராக மன்சூர் அவர்களின் வருகையின் பின் எழுச்சி பெறுவது பாராட்ட தக்க விடயமாகும்.


பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (22) ஞானசார தேரர் அஸ்கிரிய பிரிவின் மகா நாயக்கரைச் சந்திக்க கண்டிக்குச் சென்றிருந்தார்.
தனது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியாத தேரர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒருசில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பிரிவின் மகா சங்க சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை மிகவும் காலத்துக்குப் பொருத்தமானது எனவும், எதிர்வரும் காலத்தில் தான் இந்த அறிக்கையின் அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் ஞானசார தேரர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு 'பீ' அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பார்த்த போது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அளவுக்கு அச்சுறுத்தும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் இன்று இடையீட்டு மனு ஊடாக புதிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு விடயமேனும் இதில் கூறப்படவில்லை. இது ஏன் என்று கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல நேற்று திறந்த நீதிமன்றில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் இடம்பெறும் விடயங்களையோ தற்போது நிலவும் நிலைமையையோ கருத்தில் கொண்டு என்னால் தீர்மானம் எடுக்க முடியாது. நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களுக்கு அமையவே நான் தீர்மானிக்க முடியும். நாட்டில் இடம்பெறும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் பொலிரின் அறிக்கையைக் கொண்டே நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கும். எனவே பொலிஸார் அது தொடர்பில் மிக தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒருவருக்கு ஏன் பிணை அளித்தீர்கள் என பொது மக்கள் நீதிமன்றை தூற்றுவார்கள். பொலிஸாரின் நடவடிக்கையால் நீதிமன்றமே தலைகுனிவை சந்திக்கும். பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலான 73854 எனும் இலக்கத்தைக் கொண்ட வழக்கு விசாரணையின் போதே பொலிஸார் சார்பில் ஆஜரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவிடம் கேள்விக் கணைகளை தொடுத்தவாறு நீதிவான் இவ்வாறு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஞானசார தேரர் மீது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன்னதாக நீதிவானுக்கு பொலிஸார் அறிக்கை சமர்பித்திருந்தனர். அந்த அறிக்கை நேற்று பொலிஸாரால் இடையீட்டு மனுவொன்றினூடாக வலுவிழக்கச் செய்யப்பட்டு புதிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று புது அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
முன்னதாக சமர்பிக்கப்பட்ட அறிக்கையானது பாதுகாப்பாக எவரும் பார்வையிட முடியாதவாறு அப்போதிலிருந்து நீதிவானால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றைய வழக்கு விசாரணையின் இடைநடுவே நீதிவான் தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ஞானசார தேரருக்கு பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்பிட்ட நிலையில் நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல பின்வருமாறு கேள்விக் கணைகளை தொடுத்தார்.
இதற்கு முன்னர் ஒரு 'பீ' அறிக்கையை என்னிடம் தாககல் செய்தீர்கள். இரகசிய அறிக்கை என கூறினீர்கள். அதனால் அதனை பெட்டகத்தில் வைத்து நான் பாதுகாத்தேன். ஐ.சீ.சீ.பி.ஆர். சட்டத்தின் கீழ் அதில் குற்றச்¬சாட்டுக்கள் இருந்தன. அதனை வாசித்தபோது அதன் பாரதூரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நாடே பற்றி எரியும் வகையில் அதன் தன்யை நான் உணர்ந்தேன்.
எனினும் இன்று ( நேற்று ) புதிய 'பீ' அறிக்கையை சமர்பித்தீர்கள். அதில் முதல் 'பீ' அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு விடயம் ஏனும் இல்லை. ஏன் இந்த இரண்டு வேஷங்கள் என கேள்வி எழுப்பினார்.
 இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
கனம் நீதிவான் அவர்களே, உண்மையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் சட்டப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் கலந்துரையாடிய பின்னரேயே நாம் இந்த புதிய அறிக்கையை சமர்பித்தோம் என்றார்.
 இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல,
ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீங்கள் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. சாதாரண ஒருவர் தொடர்பில் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வீர்களா? குற்றம் இடம்பெற்ற இடத்தை பார்வை இடச் சென்றவரைக் கூட நீங்கள் கைது செய்து பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டே ஆஜர் செய்வீர்கள்.
இந்த வழக்கில் முதலில் நீங்கள் தாக்கல் செய்த 'பீ' அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் பிணை வழங்க முடியாத மிகப் பாரதூரமான குற்றங்கள் உள்ளடங்கியிருந்தன. ஏன் அதில் உள்ள ஒன்றுகூட இந்த அறிக்கையில் இல்லை. அவற்றுக்கு சாட்சிகள் இல்லையா. இல்லை எனில் ஏன் அப்படி ஒரு 'பீ' அறிக்கையை சமர்பித்தீர்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு என்னை எழுப்பி நீங்கள் அவசர விடயம், அபாயகரமான விடயம் எனக் கூறித்தானே அந்த பீ அறிக்கையை சமர்பித்தீர்கள்.
உங்களில் ஒருவரின் தொப்பியை கழற்றியதாகவும் சீருடையைப் பிடித்து இழுத்ததாகவும் தள்ளிவிட்டதாகவும் நீங்கள் தானே கூறினீர்கள். ஏன் அது ஒன்றும் இந்த புதிய பீ அறிக்கையில் இல்லை.
அந்த பீ அறிக்கையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை பார்த்தபோது நாடே கொளுந்துவிட்டு எரியும் அபாயம் காணப்பட்டது என கூறினார்.

இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, நீதிவான் அவர்களே, இந்த விசாரணை ஆரம்பத்தில் நான் அதற்கு பொறுப்பான கடமையில் இல்லை. நான் குற்றங்கள் தொடர்பிலான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையைப் பொறுப்பேற்ற பிறகு விசாரணைகள் மிக ஆழமாக என் ஆலோசனைப்படி முன்னெடுக்கப்பட்டன என்றார்.
 இந் நிலையில் ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் குற்றச்சாட்டுக்களை கமல் சில்வா மன்றில் பிரஸ்தாபித்த நிலையில், நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல மீளவும் திறந்த மன்றில் கருத்துக்களை தெரிவித்தார்.

நீங்கள் முதல் பீ அறிக்கையில் தெரிவித்த விடயங்களால் அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கூறினீர்கள். அதனால் இதுவரை அது என் கைகளிலேயே இருந்தது. வீட்டில் கூட யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் நான் அவதானமாக இருந்தேன். அப்படியாயின் நீங்கள் அதில் கூறியுள்ள குற்றங்கள் எதனையும் சந்தேகநபர் புரியவில்லையா? ஏன் அதில் அவ்வாறு குறிப்பிட்டீர்கள் ? என நீதிவான் மீள கேள்வி எழுப்பினார்.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, இல்லை. சந்தேக நபர் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை புரிந்தார் தான் என்றார்.
அப்படியானால் ஏன் அவற்றை வாபஸ் பெற்றீர்கள் என நீதிவான் மீள கேட்டார்.
அவசரமாக இந்த பிரச்சினையை தீர்த்து சந்தேகநபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றினை தாக்கல் செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பதிலளித்தார்.
 பொலிஸாராகிய உங்களது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றன. சந்தேக நபருக்கு பிணை மறுக்க எந்த காரணமும் உங்களால் முன்வைக்கப்படவில்லை. பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டுக்கள் மீளப் பெறப்பட்டுள்ளன என கூறி நீதிவான் பிணை அனுமதி வழங்கினார்.

அத்துடன் பொலிஸாரின் சீருடையை கழற்றுவதாகவும் முஸ்லிம் குடும்பங்களை கொலை செய்வதாகவும் பொலிஸ் வாகனத்தை தீயிட்டு கொழுத்துவதாகவும் கூறிய எந்த விடயமும் புதிய அறிக்கையில் இல்லை என சுட்டிக்காட்டிய நீதிவான், நாட்டில் என்ன நடந்த போதும் நீதிமன்றில் முன்வைக்கப்படும் கருத்துக்களை மட்டும் மையப்டுத்தியே தன்னால் தீர்மானிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
பொலிஸாராகிய உங்கள் நடவடிக்கை காரணமாக நீதிமன்றையே பொது மக்கள் குறை கூறுவர். இவர் போன்ற ஒருவருக்கு ஏன் பிணை வழங்கினீர்கள் என பொது மக்கள் கேட்பார்கள் என சுட்டிக்காட்டிய நீதிவான், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன் போது ஞானசார தேரர் பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிவானைக் கோரினர்.
இதன்போது, அவர் தானாக விசாரனைக்கு வந்து ஆஜராகியுள்ளார் என நீங்கள் தானே கூறினீர்கள். அப்படியானால் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் அப்படியான உத்தரவு தேவையற்றது என அறிவித்து அதனை நீதிவான் நிராகரித்தார்.

(எம்.எப்.எம்.பஸீர்)


இன முறுகலை ஏற்படும் விதமாக முகப்புத்தகத்தில் ஒரு பேரின நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ,புத்த பெருமா னை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தில் கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக விளக்க மறியலில் இருக்கிறார்.

அவருக்கு பிணை வழங்க மஜிஸ்திரேட்டுக்ககு அதிகாரம் இல்லை. அவ்வளவு கடுமையான சட்டத்துக்கு கீழே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.ஆனால் பகிரங்கமாக இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய வாறு பேசிய அல்லாஹ்வை அவமதிக்கும் விதத்தில் உரையாற்றிய ஞானசார தேரருக்கு பிணை வழங்க மஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் வழங்கிய சட்டம்தான் என்ன? ஏன் அந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் வாலிபரை குற்றஞசாட்ட பொலிசாருக்கு முடியாமல் போனது ?

பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகளே உங்களுக்குத்தான் இதனை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் உள்ளது.இந்த சமூகம் உங்களின் ஒவ்வொரு செயலையும் அவதானித்துக் கொண்டுதான் உள்ளது.உங்களது பட்டங்களும் பதவிகளும் அமானிதம். மறுமையில் நிச்சயம் கேள்விக்கு உட்படுத்தப்படும்.
என்னைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் இருவருக்கும் வெவ்வேறு சட்டம்.

இந்த அநீதியை சமூகம் தெரிநதிருக்க இயன்ற வரை எங்கள் பாராளுமன்றம் உறுப்பினர்களு புரிகின்றதா என்பதை எம் சமூகத்திற்கும் புரியும்!

-அமிருதீன்-


கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக பல பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலை­யிலும் இது­வ­ரையும் பொலி­ஸாரால் அவரைக் கைது செய்ய முடி­யாது போயுள்­ளது. நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் என்ற குற்றச் சாட்டில் மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு விசா­ர­ணையின் போது இரண்டு தவ­ணைகள் அவர் ஆஜ­ராகத் தவ­றி­யுள்ளார்.

இரண்­டா­வது விசா­ரணை இடம்­பெற்ற மே 31 ஆம் திகதி காலை 4.30 மணி­ய­ளவில் ஞான­சார தேரர் மஹ­ர­கம நாவின்­ன­யி­லுள்ள பிர­ப­ல­மற்ற தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். அதற்­கி­ணங்க அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார் என்­ப­தற்­கான வைத்­தியச் சான்று ஒன்று மேல் நீதி­மன்­றத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைகள் முடிந்த கையோடு ஞான­சா­ரவை குறித்த வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து டிக்கட் வெட்டி வெளி­யெ­டுத்­தி­ருக்­கி­றார்கள் என்று அறிய முடி­கி­றது.

அப்­ப­டி­யி­ருந்தும் அவர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை இது­வரை பொலி­ஸாரால் கண்­டு­கொள்ள முடி­யாது போயுள்­ளது. ஞான­சார தேரரால் நீதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வைத்­திய சான்­றிதழ் கையால் எழு­தப்­பட்­டி­ருப்­ப­துடன் அது ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் இல்­லா­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால் அப்­ப­டி­யி­ருந்தும் அச்­சான்­றிதழ் மேல் முறை­யீட்டு நீதி­மன்­றத்தால் ஏற்­கப்­பட்டு வழக்கு விசா­ர­ணை மீண்டும் ஜூன் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இத்­த­கைய வைத்­தியச் சான்று ஒன்றை வழங்­கு­வது தொடர்­பாக குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ராக இலங்கை வைத்­திய சபை­யிடம் முறை­யீடு செய்­ய­வுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். எவ்­வா­றான போதிலும் ஞான­சா­ரவைக் கைது செய்யும் முயற்­சியை பொலிஸார் கைவி­ட­வில்­லை­யென்று பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் கூறு­கிறார்.

கைது செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக ஞான­சார தேரர் ஒளிந்­தி­ருக்­கிறார் என்­பது நன்கு தெளி­வா­கி­றது. அவ்­வாறு மறைந்­தி­ருக்கும் நிலை­யிலும் அவர் ஊட­கங்­க­ளுக்குப் பேட்­டி­ய­ளித்து வரு­கிறார். அத்­த­கைய பேட்­டி­யொன்றில் தேவைப்­படும் பட்­சத்தில் நாட்டைக் கலக்­கி­யெ­டுக்கத் தன்னால் இயலும் என்று வீறாப்பு வேறு விடுத்­தி­ருக்­கிறார்.

பொலிஸ் மா அதி­பரை நிந்­திக்கும் வகையில் வீடியோ ஒன்­றையும் வெளி­யிட்­டி­ருக்­கிறார். இவை அனைத்தின் ஊடா­கவும் ஞான­சார தேரர், பொலிஸ், நீதி­மன்றம் மற்றும் சட்­டத்­துக்கு மட்­டு­மின்றி நாட்டில் மிகவும் அவ­சி­ய­மாக பேண­பட வேண்­டிய சட்டம் ஒழுங்குத் துறைக்கும் பாரிய அவ­மா­னத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். நாட்டில் சட்­டத்தை முறை­யாக நிலைநாட்­டு­வ­தாகக் கூறிக் கொண்டு பத­விக்கு வந்த அர­சாங்­கத்­துக்கும் இவ­ரது செயற்­பாடு அவ­மா­னத்­தையே கொடுத்­தி­ருக்­கி­றது.

அக்­கி­ர­மங்­க­ளுக்­கெல்லாம் கதா­பாத்­தி­ர­மேந்தி காவி­யுடை தரித்த கொலை வெறி­ய­னாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த தனி பிக்­கு­வுக்கு ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க வாய்ப்­பொன்­றுதான் கிடைத்­தி­ருக்­கி­றது. அவர் சட்­டத்தின் முன் முகம் கொடுக்கத் தவறும் ஒவ்­வொரு நிமி­டமும் நாட்டில் சட்டம் எந்­த­ளவு தூரம் பாதா­ளத்தில் வீழ்ந்­து கொண்டி­ருக்­கி­றது என்­பதை உணர்த்திக் கொண்­டி­ருக்­கி­றது. அத்­துடன் அர­சுக்கும் இதன் மூலம் பலத்த அவ­மா­னம்தான் விளைந்து கொண்­டி­ருக்­கி­றது.

பாதாள உலகக் கோஷ்­டி­யினர் ஒரு­வ­ரை­யொ­ருவர் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய கொலை­யொன்­றுடன் தொடர்­பு­டைய கொலை­காரன் நாட்டை விட்டும் தப்பிச் சென்று இந்­தி­யாவில் தலை­ம­றை­வாக இருக்­கையில் அவரைக் கைது செய்­த­தாக தம்­பட்ட மடிக்கும் இலங்­கையின் அதி கெட்­டிக்­கார பொலி­ஸாரால் ஞான­சார தேரரைக் கைது செய்ய இய­லா­தி­ருப்­பதன் மர்மம் எதனை உணர்த்­து­கி­றது? பொலிஸார் வேண்­டு­மென்றே அவரைக் கைது செய்­வதில் நின்று தவிர்ந்து வரு­கி­றார்கள் என்­பதை உணர்த்­து­கி­ற­தல்­லவா?

தனி நபர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்­காக பல விசேட குழுக்­களை நிறுத்­தியும் அது கைகூ­டா­துள்­ள­தென்றால் பொலிஸ் மா அதிபர் வெட்கித் தலை­கு­னிய வேண்டும். ஞான­சார தேரரை பொலிஸ்மா அதிபர் ஒரு வீர­னாகக் காண்­ப­தனா­லேதான் அவர் வெட்­கப்­ப­டு­வ­தில்லை.

தற்­போது ஞான­சார தேரர் நாட்டில் பெரும்­பா­லா­னோ­ருக்கு ஆத்ம ஞான வீர­னா­க­வுள்ளார். இன்னும் சில­ருக்கு அவர் பகி­ரங்க வீரன் மற்றும் சில­ரது மன­திலே அவர் இர­க­சிய வீரனாக வீற்றிருக்கிறார்.

முஸ்­லிம்கள் மீதான குரோ­தத்தை வளர்த்து வரும் அடிப்­ப­டை­வாத சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு பகி­ரங்க வீர­னாக ஞான­சார விளங்­கு­கிறார். வில்­பத்து வனங்கள் அழிப்பு, மன்­னாரில் காணிகள் கைப்­பற்றிக் கொள்ளல், பௌத்த சின்­னங்கள் அழித்தல், சிங்­கள இனம் பெரு­குவதை கட்­டுப்­ப­டுத்த முயற்­சித்தல், வர்த்­தகத் துறையில் மேலா­திக்கம் செலுத்­துதல் போன்ற சொல்ல முடி­யாத போலிக் கார­ணங்­க­ளை­யெல்லாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்துக் கொண்­டி­ருக்கும் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு இன்­றி­ருக்கும் மாவீரன் ஞான­சார தேரர்தான்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல­வா­றான கட்­டுக்­க­தை­க­ளையும் பரப்­பியும் பல்­வேறு உரு­விலும் பல்­வேறு அமைப்­புக்­க­ளா­கவும் திரண்டு அடிப்­ப­டை­வா­திகள் களத்தில் குதித்­தி­ருக்­கி­றார்கள். இவை அனைத்­துக்கும் ஞான­சார தேரரே தலை­மைத்­துவம் வழங்கி முன்­ன­ணியில் திகழ்­கிறார். தன்னை வீர­னாகக் காட்டிக் கொள்ளும் போர்­வை­யி­லேயே ஞான­சார இவ்­வாறு துடித்துக் கொண்­டி­ருக்­கிறார். இன்னும் அடிப்­படைவாதத்­திற்கு பகி­ரங்­க­மாக ஆத­ர­வ­ளிக்­காத இலங்கை மக்கள் மத்­தியில் தன்னைத் தொடரும் பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எத்­த­கைய பீதி­யு­மின்றி செய­லாற்­று­வ­தற்கு ஆக்­கமும் ஊக்­கமும் ஊட்டிக் கொண்­டி­ருப்­பது ஞான­சார தேரர்தான். அது அவ­ரது காவி­யு­டை­த­ரித்த பிக்கு என்ற பலத்தைப் பயன்­ப­டுத்­தியே சாதித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலக்கு வைத்து செயற்­படும் நட­வ­டிக்­கை­களும் இவர்­க­ளது நோக்­கமும் என்­ன­வென்று நன்கு தெளி­வா­கவே புலப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எல்லாப் புறங்­க­ளில் இருந்தும் இயன்ற வரை­யான எதிர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது, தமது தலை­வ­ரான ஞான­சார தேர­ருக்கு போதிய பாது­காப்பு வழங்­கு­வது போன்ற காரி­யங்­க­ளிலும் இது­வரை ஈடு­பாடு காட்டி வரு­கி­றார்கள். இத்­த­கை­யோரை இல­கு­வாக இனங்­கண்டு கொள்ள முடியும்.

ஆனால் இனம் கண்­டு­கொள்ள முடி­யாத, இன்­னொரு கூட்­டமும் இருக்­கவே செய்­கி­றது. இத்­த­கை­யோரை இனங்­காண்­பது சிக்­க­லா­கவும் விரைவில் இனங்­கண்டு கொள்ள முடி­யா­மலும் இருக்­கிற இக்கூட்­டத்­தினர் குறித்து தான் நாம் சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சிங்­கள மக்கள், சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்லிம் மக்­க­ளுடன் ஒருதாய் மக்கள் போல் இருக்க வேண்டும்; சமா­தானம், சக­வாழ்வு போன்ற பண்­பு­களை நாடு முழு­வதும் விதைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே மறு­த­லை­யாக கரண மடிக்கும் சிலரே மேலே சுட்­டிக்­காட்­டி­யுள்ள அடுத்த கூட்­டத்­தி­ன­ரா­வர்.

ஒரு­பு­றத்தில் நாட்டில் இனம், மதங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் நிலவ வேண்டும் என்று தன்­னைக்­காட்டிக் கொள்ளும் இக்­கூட்­டத்­தினர் உள் மனதால் ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களை ஆத­ரித்தும் அவரைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிரி­வி­ன­ரா­வார்கள். தன்னால் செய்ய இய­லா­ததை ஞான­சாரர் மூலம் சாதிக்­கப்­ப­டு­கி­றதே என்ற நிலைப்­பாட்டில் இருப்­ப­வர்­கள்தான் இவர்கள்.

இந்த வரி­சையில் ஒரு சில மகா­நா­யக்க தேரர்கள் முதல் ஏனைய பெரிய சிறிய பிக்­கு­மார்கள் பலரும் இருக்­கி­றார்கள். அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களும் உள்­ளார்கள். ஒரு சில நீதி­வான்­களும் இந்தக் கூட்­டத்­துடன் கைகோர்த்­தி­ருக்­கி­றார்கள். உதா­ர­ணத்­திற்கு நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவும் ஞான­சார பக்கம் சார்ந்­தி­ருப்­ப­தா­கவே எம்மால் எடை போடக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

எனவே மேற்­கண்ட நேரடி, மறை­முகம் ஆகிய இரண்டு கூட்­டத்­தி­னரும் ஞான­சா­ர­வுக்குப் பரிந்து பேசு­வோ­ரா­கவே உள்­ளனர். ஞான­சார தேரர் சட்­டத்தின் பிடியில் சிக்­காது அவரைக் கப்­பாற்­று­வதில் உள்ளே இருந்து கொண்டு தடை­களைப் போட்டு நடந்து கொள்­வது இரண்­டா­வது கூட்­டத்­தி­ன­ரே­யாவர். அண்­மையில் அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை வெளி­யிடும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறு­கையில்;
இந்த சின்­னஞ்­சிறு நாட்டில் ஞான­சார தேரர் இவ்­வ­ளவு காலமும் மறைந்­தி­ருக்­கிறார் என்றால் அர­சாங்­கத்­தி­லுள்ள மிகவும் முக்­கி­ய­மான ஒரு­வரின் பாது­காப்பு அவ­ருக்கு வழங்­கப்­ப­டு­வதே கார­ண­மென ஊகிக்க முடி­கி­றது என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.
இவ்­வாறு ஞான­சார தேர­ருக்கு இரு வழி­களில் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­வ­தாகக் கொள்­ளலாம். சில சில விட­யங்­களைச் செய்­வது மூலம் சாதிப்­பது ஒரு வழி­யாகும். மற்­றது சில சில விட­யங்­களைச் செய்­யா­தி­ருந்து சாதித்­துக்­கொள்­வது அடுத்த வழி­யாகும்.
சில சில விட­யங்­களைச் செய்­வதன் மூலம் ஞான­சார தேரரைக் காப்­பாற்ற முயல்வோர் முன்பு குறிப்­பிட்ட இரண்டாம் கூட்­டத்தைச் சேர்ந்­தோ­ராவர்.

பொலி­ஸா­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் இயன்ற வரையில் உள்­ளி­ருந்து மறை­மு­க­மாக அழுத்­தங்­களைக் கொடுத்து ஞான­சா­ரவைக் கைது செய்­வதில் நின்றும் தடுத்துக் கொண்­டி­ருப்போர் இவர்­க­ளாவர். மேல் மட்­டத்­தி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள், அமைச்­சர்கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் அர­சாங்­கத்தில் ஒட்டிக் கொண்­டி­ருந்­து­விட்டு இப்­போது இந்த அரசின் அபி­மா­னி­க­ளாக இருக்கும் அர­சி­யல்­வா­திகள், உயர்­நி­லை­யி­லுள்ள பிக்­கு­மார்கள் என்று ஒரு பெருங்­கூட்­டமே இந்த இரண்டாம் நிலைக் கூட்­டத்தில் அடங்­கு­கின்­றனர்.
எந்­த­வொரு விட­யங்­க­ளையும் செய்­யாது ஞான­சார தேரரை சட்­டத்தின் முன்­கொண்­டு­வ­ராது தடுக்கும் கூட­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், பொலிஸ்மா அதிபர் உட்­பட அரச அதி­யுயர் மட்டத் தலை­வர்கள் காணப்­ப­டு­கி­றார்கள்.

அர­சாங்­கத்தின் ஏனைய சகல விட­யங்­க­ளி­லும்­போல மேற்­படி முதல்­தர வரி­சை­யினர் ஞான­சார தேரரின் குறிக்­கோ­ளான இன­வாத, மத­வாத போக்­கு­க­ளுக்கு அர­சியல் ரீதியில் எதிர்ப்­பு­க­ளையும் காட்­டாது ஒதுங்­கியே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சில சந்­தர்ப்­பங்­களில் இன­வா­தத்­திற்கு எதி­ராக பல்­வேறு அறிக்­கை­க­ளையும் விடுத்­து­வ­ரு­வதும் மறுப்­ப­தற்­கில்லை. இவை எல்லாம் வெறும் கண் துடைப்­பு­க­ளா­கத்தான் இருக்­கின்­ற­ன­வே­யன்றி இன­வா­தத்தை இல்­லாமல் ஆக்கக் கூடி­ய­ன­வா­க­வில்லை. ஆனால் இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த விதத்தை உற்று நோக்­கு­கையில் இன­வா­தத்­திற்கும் மத­வா­தத்­திற்கும் எதி­ராக நாட்டை வழி நடத்திச் சென்­றி­ருக்க வேண்டும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் பரி­பா­ல­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவர்கள் இன்னும் அந்த இடத்­திற்குச் செல்­ல­வில்லை. மஹிந்­தவின் ஆட்­சியில் முழு சக்­தியும் இன­வாதம் மத­வா­தத்­துக்கு தூப­மி­டு­வ­தா­கவே செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஆட்­சி­ய­மைப்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மஹிந்த சிந்­த­னையின் ஒரு பகு­தி­யாக விளங்­கிய இன, மத­வா­தத்தால் நாடு எதிர்­கொண்ட நாச­கார அழி­வு­களை முன்­வைத்தே பத­விக்கு வந்­தனர் என்­பதே யதார்த்­த­மாகும்.

இன, மத வதத்தால் எழுந்த அழிந்து நலிந்து போன நாட்டை மீட்­ப­தாகக் கூறியே, இவர்கள் பத­விக்கு வந்­தனர். எனவே இப்­போது இன, மத வாதங்கள் தலை­தூக்­கு­மே­யானால் அது ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கு மட்­ட­மின்றி நாட்­டுக்கும் பேர­வ­மா­ன­மே­யாகும். இந்த அரசு வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட கொள்­கை­ய­ளவில் கடைப்­பி­டிக்க வேண்­டிய இன, மத, வாதத்­திற்கு எதி­ராக எத­னைத்தான் கையாண்­டி­ருக்­கி­றது? அந்­தந்த பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் குறித்த பிரதேசத்தில் நிகழும் இன, மதவாதத் தாக்குதல்களைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவர்கள் பாராமுகமாக இருப்பதைத்தான் இந்த அரசு செய்திருக்கிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடியவில்லை. குற்றமிழைத்தோர் பரந்தளவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. மேற்படி பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு பொலிஸார் அவர்கள் கடமையைச் செய்யட்டும் என்று விட்டு விட்டு தன்பாட்டில் இருப்பதைத் தான் அரசு கண் துடைப்பாக செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது, இருப்பது குறித்தும் ஞானசார தேரர் கைது செய்யப்படாமை குறித்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கதைப்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

அதுவும் மிகவும் காலங் கடந்தே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் இத்தகைய செயற்பாடு எதனை உணர்த்துகிறது? ஞானசார தேரரை தம் மானசீக வீரனாக அரசு அங்கீகரித்திருப்பதை உணர்த்துவதாகத்தானே உள்ளது.

நன்றி: ராவய


இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த சோதனைக்காலத்தின்போது இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிய செனட் வெளியுறவு விவகார குழுவின் செனட்டர் நுஸ்சாட் சாபிக் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் இரண்டு நாடுகளும் உறவை பலப்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான நான்குபேர் குழுவை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதேவேளை, தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, பாகிஸ்தானின் ஒத்துழைப்பை பாராட்டி பேசியுள்ளார்.


பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து பாதை, வீதிகளுக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் பிடிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில், தொடரூந்து பாதைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனும் அவரது சகோதரரான 26 வயதான இளைஞரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


நம் வாழ்நாளில் காண துடிக்கும் கண்மனி ரசூல் நாயகத்தின் மதினா அல்லாஹ் அக்பர்

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
மஸ்ஜித் நபவிக்குள் கொஞ்ச நேரம் சுற்றி வர மேற்படி லிங்கில் அழுத்துங்கள்.

https://www.spinattic.com/1580/Prophet_Mosque?full

-நூருல் ஹுதா உமர்-

அமெரிக்காவின் மிச்சிக்கன் பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு பதாகைகளுடன் தனித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்ணை எதிர்பார்க்காத வகையில் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் கட்டுத் தழுவியதை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் முஸ்லிம்களுடன் நட்புப் பாராட்டியது பலருக்குஅதிர்ச்சியை அதேவேளை ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.


இஸ்லாமிய வன்முறைக்கு எதிராக கடந்த ஞாயிறன்று பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஒன்றுதிரள திட்டமிட்டபோதும் ஒரு பெண் மாத்திரமே எதிர்ப்பு பதாகைகளுடன் எஞ்சியிருந்தார்.
அப்போதே பர்தா அணிந்த முஸ்லிம் பெண், ஏனைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்து குறித்த பெண்ணை கட்டித் தழுவிக்கொண்டார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட விவாதத் திற்கு பின் அவர் பள்ளிவாசலுக்குள் வர விருப்பம் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பெண் பள்ளிவாசலுக்குள் செல்வதை பார்த்து அங்கு காவலுக்கு வந்த பொலிஸாரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். கர கோசத்துடன் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு காலை விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
எனது கணவன் மற்றும் போதகர் எதிர்ப்பு வெளியிட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண், தான் இப்படி ஒரு அனுபவத்தை சந்திப்பேன் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது.

புனித மக்கா "மஸ்ஜித் அல் ஹரமில் நேற்றையதினம் இரவு தொழுகயில் 1.5 மில்லியன் மக்கள் பங்குபெற்றனர்"

அண்மையில் நடைபெற்று முடிந்த சம்பியன் ட்ரெபி 2017 இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து வெற்றியீட்டிய பாக்கிஸ்தான் அணியினர் உம்ராஹ் கடமையை நிறைவேற்ற பகிஸ்தான் கிரிக்கெட்  அனியினர் நாளை வெள்ளிக்கிழமை மக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.


நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது.

அவர் நீதியைக்கண்டு ஒழியவில்லை தனது பாதுகாப்பிற்காகவே மறைந்துள்ளார் எனவும் தேரர் தரப்பு தெரிவித்தது.

மேலும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தம்பி மூலமாக தேரர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் பொலிசார் கைது செய்ய வந்ததும் அதற்காகவே எனவும் பொதுபலசேனா குற்றச்சாட்டினை முன்வைத்தது.

எனினும் நேற்று அந்த குற்றச்சாட்டுகளோ, உயிர் அச்சுறுத்தல் விடயமோ பேசப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதேபோல ஞானசாரரைக் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவரை கூடிய விரைவில் கைது செய்யபோவதாகவும், அதற்கு பொதுமக்களின் உதவியையும் கூட பொலிசார் கோரியிருந்தனர்.

அரசு தரப்பும் இது விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. அசமந்த போக்கினையே கடைபிடித்து வந்தது. உதாரணமாக ஒழிந்துள்ளவரை கைது செய்வது கடினம் என அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஞானசாரரைக் கைது செய்ய முடியாமல் போனதில் தனது இயலாமையை தெரிவித்துக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் பொலிசாரினதும், அரசினதும் இழுத்தடிப்புகள் தெளிவு படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஞானசாரருக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பும், தமது செயற்பாடுகளுக்கும் எவருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஞானசாரரும், பொதுபல சேனாவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஞானசாரர் நேற்று சரணடைந்து, அதே வேகத்தில் பிணையில் வந்தும் விட்டார்.

குறிப்பாக தேரர் நேற்று சரணடைந்தது தனக்கு எதிரான இரு வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் முகமாகவே.

ஆனால் அவரை கைது செய்ய நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டது, ஞானசாரர் வழக்குகளில் ஆஜராகாத குற்றச்சாட்டுகளுக்காக அல்ல.

அவர் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவித்தார், முஸ்லிம் மதத்தினையும் அல்லாஹுவையும் அவதூறாக பேசியக் குற்றச்சாட்டுக்காகவே

இந்தக் குற்றச்சாட்டுகளே ஞானசாரதேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தேரர் அல்லாஹுவை அவதூறாக பேசவில்லை அது சுத்தமான சிங்களச் சொல் எனவே அது போலியான குற்றச்சாட்டு எனவும் பொதுபலசேனா ஊடகங்களுக்கு தெரிவித்தது.

என்றாலும் நேற்றைய தினம் அந்த குற்றச்சாட்டுகள் நிமித்தம் ஞானசாரர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன எனவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தது, வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் படி ஞானசார தேரர் விவகாரத்தில் ஆரம்பத்தில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறியதும், பொலிஸார் அவரை சிறையில் வைத்து கொலை செய்ய உள்ளதாக கூறியதும் போலியானவை என்று கூறப்படுகின்றது.

அதேபோல் 4 விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டு வருவதாக சித்தரிக்கப்பட்ட ஞானசாரர் நேற்று சர்வ சாதாரணமாக நீதிமன்றத்திற்கு வந்து சென்றதன் மூலம்.,

அவரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

காரணம் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பொலிஸாரின் தேடுதல் வேட்டையும் உண்மையாக இருந்தால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

எனவே இந்த தேரர் விடயத்தில் பின்னணியில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர் என்பதே வெளிப்படை. இதேவேளை கொழும்பு ஊடகம் ஒன்றும் அமைச்சர் ஒருவர் இதன் பின்னணியில் இருக்கின்றார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஆக மொத்தத்தில் ஞானசாரர் இனவாதம் பரப்பியது, தலைறைவாக இருந்தமை, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக கூறியமை, 4 பொலிஸ் குழுக்கள் அவரைத் தேடுவதாக கூறியமை.,

உட்பட அனைத்துமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பதும் இன்றைய நிலையில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த விடுமுறைக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ள நிலையில் ரமழான்ன் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடுமுறை நீட்டிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MARI themes

Powered by Blogger.