Showing posts with label world. Show all posts



கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து மூன்று முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது.

இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை நான்கு முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வட அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது.

இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதன் முதலாக ஒரு ஏவுகணையை செலுத்தியது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாகவும், அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு பாயும் ரகத்தை சேர்ந்ததாக இருக்க முடியாது என்றும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்துக்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுவரும் நிலையில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன.





ரஷ்ய பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­பா­னது.
இந்தத் தேர்­தலில் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு விசு­வா­ச­மான கட்­சிகள் செல்­வாக்கைச் செலுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ரஷ்­யா­வா­னது பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் சிரி­யா­வி­லான போர் என்­பன தொடர்­பில் ­அ­தி­ருப்­தியை சம்­பா­தித்­துள்ள நிலை­யிலும் புட்­டினின் மக்கள் மத்­தி­யி­லான செல்­வாக்கு தொடர்ந்து உயர்­வாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ­ரது மக்கள் மத்­தி­யி­லான செல்­வாக்கு 80 சத­வீ­த­மாக உள்­ள­தாக கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் தெரி­விக்­கின்­றன.
காலை 8 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­கெ­டுப்­புகள் இரவு 11 மணிக்கு நிறை­வு­பெற்­றன.
இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்க சுமார் 110 மில்­லியன் மக்கள் தகுதி பெற்­றுள்­ளனர்.
இத் தேர்­தலில் பெரு­ம­ளவு வாக்குகளைப் பெற்று தன்னைப் பலப்படுத்திக் கொள்ள புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சி எதிர்பார்த்துள்ளது.
 ஆரம்பம்


ரஷ்ய பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­பா­னது.
இந்தத் தேர்­தலில் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு விசு­வா­ச­மான கட்­சிகள் செல்­வாக்கைச் செலுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ரஷ்­யா­வா­னது பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் சிரி­யா­வி­லான போர் என்­பன தொடர்­பில் ­அ­தி­ருப்­தியை சம்­பா­தித்­துள்ள நிலை­யிலும் புட்­டினின் மக்கள் மத்­தி­யி­லான செல்­வாக்கு தொடர்ந்து உயர்­வாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ­ரது மக்கள் மத்­தி­யி­லான செல்­வாக்கு 80 சத­வீ­த­மாக உள்­ள­தாக கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் தெரி­விக்­கின்­றன.
காலை 8 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­கெ­டுப்­புகள் இரவு 11 மணிக்கு நிறை­வு­பெற்­றன.
இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்க சுமார் 110 மில்­லியன் மக்கள் தகுதி பெற்­றுள்­ளனர்.
இத் தேர்­தலில் பெரு­ம­ளவு வாக்குகளைப் பெற்று தன்னைப் பலப்படுத்திக் கொள்ள புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சி எதிர்பார்த்துள்ளது.




கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது.

நியூயார்க்:
கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது.

வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கியதன் மூலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சமூக வலைத்தளமான பேஸ்புக் சமீபத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளானது.
அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க ஒரு நேபாள சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ஓடிவரும் காட்சி பதிவாகி இருந்தது.
குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாத பேஸ்புக் நிறுவனம், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்தது.

பல வாரங்களுக்குமுன், நார்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவும் நீக்கப்பட்டது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தற்போது இந்த புகைப்படத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உள்ளது.
வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடிவந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது.
போரின் வீரியத்தை உணர்த்தும் இந்தச் சிறுமி ஓடிவந்த காட்சியை படம்பிடித்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார்.
1997-ல் ‘Kim Phuc Foundation’ என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து ‘Kim Phuc Foundation International’ என்ற பெயரில் இயங்கி வருவது, குறிப்பிடத்தக்கது.



அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.

இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.

அதிபர் ஒபாமா இந்த மசோதாவை தான் நிராகரிக்கவுள்ளதை வலியுறுத்தியுள்ளார்.





பேரரிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற செப்டம்பர் 15ம் தேதி, தமிழக சிறையில் பல வருடங்களாக உள்ள கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளன்று, சில கைதிகளை விடுதலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் 2008ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. ஆனால், இதனை எதிர்த்து பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் அந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் அரசாணையில் நாங்கள் தலையிட முடியாது என்று கடந்த மே மாதம் 16ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், இந்த ஆண்டு கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடும் ராஜீவ் கொலையாளிகள், ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.



 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியே என்ற குற்றச்சாட்டை அதன் தலைவர் சீமான் மறுத்துள்ளார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல முறை இந்தியா வந்துள்ளார். அந்த சந்தர்ப்பங்களில் நாம் அவரது பயணத்தை குழப்பவோ வன்முறைகளை பிரயோகிக்கவோ இல்லை என சுட்டிக்காட்டிய சீமான், “நாம் ஒரு அரசியல் கட்சி” எப்போதும் தமது எதிர்ப்புக்களை ஜனநாயக ரீதியிலேயே வெளிப்படுத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை பாரளுமன்றத்தில் உரையாற்றிய போது, இப்ராஹிம் தாக்கப்பட்ட விவகாரத்தில் இலங்கை தமிழர்கள் எவரும்  தொடர்புபட்டிருக்கவில்லையெனவும், நாம் தமிழர் கட்சியின் மலேஷிய கிளையினரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை சிறிலங்கா ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

சிறிலங்காவிற்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையாளராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டவுடன் இவர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில் சிறிலங்கா ஊடகங்கள், அரசியல்வாதிகள், முன்னணி வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் போன்றன அதிக ஆர்வம் காண்பித்தன.

தரன்ஜித் சிங் சந்து 2000-2004 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் இந்திய உயர் ஆணையகத்தின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட காலப்பகுதியே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இக்காலப்பகுதியில் சிறிலங்காவில் அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெற்றன.

2001ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் எஸ்.பி.திசநாயக்க உட்பட்ட குழுவினர் சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியதும், நோர்வேயின் தலையீட்டுடன் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில் தான்.

இதே காலப்பகுதியிலேயே அப்போது அதிபராக இருந்த சந்திரிக்கா, பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரணில் அரசாங்கத்தைக் கலைத்தார். இதுவே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதற்கும் வழிவகுத்தது. ர

ணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அப்போதைய இந்திய உயர் ஆணையாளர் நிருபாமா சென் முன்னெடுத்த நகர்வுகள் தொடர்பாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ரணில் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோவால் எழுதப்பட்ட My belly is white என்கின்ற நூலில் இந்திய உயர் ஆணையகத்தால் ரணிலின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் இந்திய உயர் ஆணையகத்தில் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட சந்து, தற்போது ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் பிரதமராக இருக்கும் இக்காலப்பகுதியில் இந்தியாவின் புதிய உயர் ஆணையாளராக சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளமையானது அனைவரின் கவனத்தையும் குவித்துள்ள ஒரு சுவாரசியமான விடயமாகும்.

சந்துவிற்கு முன்னர் சிறிலங்காவிற்கான இந்தியாவின் உயர் ஆணையாளராகச் செயற்பட்ட சின்ஹா, சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பிய ஒரு இராஜதந்திரி ஆவார். இந்த அடிப்படையில், மகிந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு இந்தியாவே ஆதரவாக இருந்ததாக மகிந்த ஆதரவு அணிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த விடயமானது முன்னாள் பாதுகாப்புச் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவாலும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் மகிந்தவை நாட்டின் அதிபராக்குவதற்கான உதவியை கோத்தபாய இந்தியாவிடம் கோரி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் சார்பாக சந்திரிக்காவின் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்குத் திட்டம் தீட்டிய மிலிந்த மொறகொடவே தற்போது கோத்தபாயவிற்குப் பதிலாக இந்திய உயர் ஆணையகத்திற்கு தகவல்களை வழங்கி வருகிறார்.

பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு எதிரான மகிந்தவின் நிலைப்பாட்டை இந்திய உயர் அணையாளர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்திய உயர் ஆணையாளர் நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளுக்குள் தலையீடு செய்வதாக ஜி.எல்.பீரிஸ் மற்றும் விமல் வீரவன்ச ஊடாக மகிந்தவால் இந்திய உயர் ஆணையாளருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இதனால் இந்திய உயர் ஆணையாளர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மகிந்தவால் கோரப்பட்டது.

சின்ஹாவிற்கு முன்னர் சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராக செயற்பட்ட அசோக் காந்தாவுடனும் மகிந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். இதனால் சிறிலங்காவிற்கு எதிராக காந்தாவினால் இந்தியாவிற்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனால் இந்த முரண்பாடு மேலும் விரிசலடைந்தது.

1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து இந்தியா தொடர்பான கசப்பான தகவல்களை கோத்தபாய வழங்கி வருகிறார். தற்போது கோத்தபாயவால் இந்தியாவின் உதவி நாடப்பட்டாலும் கூட, இவரால் மீண்டும் சிறிலங்காவின் அதிபர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது. இந்திய உயர் ஆணையகத்தில் சந்து அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியதை விடத் தற்போது மகிந்த இவருடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறார்.

இந்தியாவின் சமஸ்டி முறைமை மற்றும் இந்தியாவின் தலையீடு தொடர்பாகவும் ஆராயப்பட்டது. நோர்வேயின் தலையீட்டிற்குப் பதிலாக இந்தியாவின் சமஸ்டி முறைமை மற்றும் இந்தியாவின் தலையீட்டைத் தான் விரும்புவதாகவும் மகிந்தவால் கூறப்பட்டது.

சீனா மற்றும் மேற்குலகிற்குத் திருப்தி தரும் விதமாகவும் அதேவேளையில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

2002இலும் ரணில் அரசாங்கத்துடன் இந்தியாவானது நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தது. எனினும், இந்திய மத்திய அரசாங்கமானது நோர்வேயின் தலையீட்டை ஆதரிக்கவில்லை.

அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கு ரணில் அரசாங்கமானது நோர்வேயின் தலையீடு தொடர்பாக தெரிவித்தது.

இருப்பினும் ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தொடர்பில் சவுத் புளொக் எனப்படும்,இந்திய இராஜதந்திர அலகு தீர்மானங்களை எடுக்கும் வரை, ரணில் இருளிலேயே இருந்தார்.

ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
மொழியாக்கம் – நித்தியபாரதி
வழிமூலம் – சிலோன்ருடே


அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து சர்ச்சைக்குரிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ தகாத சொல் ஒன்றை பயன்படுத்தியதற்கு சில நாட்களுக்கு பிறகு இருவரும் லாவோஸில் சந்தித்துள்ளனர்.

லாவோஸ் தலைநகரான வியன்டியானில் நடந்த தென் கிழக்கு ஆசிய சங்க உச்சி மாநாட்டின் போது இரவு உணவு நேரத்தில், இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் குறைந்த நேரம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து தகாத சொல் ஒன்றை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பயன்படுத்தியதால், அவருடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்தார்.
பின்னர், தனது விமர்சனம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மாறியுள்ளது குறித்து தான் வருந்துவதாக ரொட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.



ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த ஆண்டின் புனித ஹஜ் கடமை ஆரம்பிக்கும் தருணத்திலேயே பிராந்தியத்தின் ஷியா, சுன்னி எதிரி நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய யாத்திரிகர்களை சவூதி நிர்வாகமே கொலை செய்ததாக ஆயதுல்லாஹ் அலி கமனெய் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த சனநெரிசலில் 2,426 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமற்ற கணக்குகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த அனர்த்தத்தில் 769 பேரே கொல்லப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிடுகிறது.

கமெனியின் கருத்து குறித்து அல் ஷெய்க், மக்கா பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். அதில்,

“அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாஹியின் புதல்வர்கள். அவர்கள் முஸ்லிம்கள் மீது பாரம்பரியமாக விரோதப்போக்கு கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சவூதியின் ஆளும் குடும்பம் பின்பற்றும் வாஹ்ஹாபிய கொள்கை ஆதரவாளர்கள் உட்பட கடும்போக்கு சுன்னிக்கள் ஷியாக்களை “நிராகரிப்பாளர்” என்றே கருதி வருகின்றனர்.



தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
மண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதா மற்றும் சித்தராமையா உருவபொம்மை எரிப்பு
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர்
போராட்டத்தில் பங்கெடுத்த பெண்கள்
தமிழ் திரைப்பட பேனர்களை அகற்றி ஆர்ப்பாட்டம்
முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.


சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சிரியாவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் ஃபைசல் மெக்டாட் நிராகரித்துள்ளார்.

நாட்டில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகள் பைத்தியக்காரமானவை மற்றும் நம்பமுடியாத்து என்று பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், மெக்டாட் தெரிவித்தார்.
சிரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்தது என்று குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.




   இலங்கை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்தமைக்கு பாராட்டப்பட வேண்டும் எனஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum தெரிவித்துள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சுதெரிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஈராக்கிற்கான இலங்கையின் புதியதூதுவர் நிரஞ்சன் அசோக ரணசிங்கவிற்கு நியமனம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போதே ஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது வாழ்த்துக்களைதெரிவிக்குமாறு தூதுவரிடம் ஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum கேட்டுக்கொண்டார்.
2015ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பல அபிவிருத்திதிட்டங்களில் முன்னேற்றமடைந்துள்ளது என ஈராக்கின்ஜனாதிபதி Fuad Masum தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது இலங்கை மற்றும் ஈராகிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளைவலுப்படுத்தும் நோக்கில் மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மலே­ஷி­யா­வுக்­கான இலங்கை உயர்­ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் மீது கோலா­லம்­பூர் விமான நிலையத்தில் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்பவம் தொடர்பில் அந்­நாட்­டு அர­சாங்கம் தனது வருத்­தத்தை தெரி­வித்துள்­ள­துடன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­­கா­லத்தில் இடம்பெ­றாத வகையில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் எனவும் உறு­தி­யளித்துள்­ள­து. இது தொடர்பில் மலேஷிய அர­சாங்கம் நேற்று முன்­தினம் வெளியிட்­டுள்ள
உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வா­று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.
'' இந்தத் தாக்­கு­தல்­களில் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் சிறிய காயங்­க­ளுக்­குட்­பட்­டுள்ளார். இதனால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சாருக்கு மலே­சிய அர­சாங்கம் தனது அனு­தா­பத்தை தெரி­வித்துக் கொள்­கி­றது. இது குறித்து மலே­சிய அதி­கா­ரிகள் முழு­மை­யான விசா­ர­ணை­களை மேற் ­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வார்கள் என்­ற உறு­தி­மொ­ழி­யையும் அளிக்­கி­றது.
மலே­சிய வெளிவி­வ­கார அமைச்சு கோலா­லம்­பூ­ரி­லுள்ள இலங்கை உயர் ஸ்தா­னி­க­ரா­ல­யத்­துடன் இணைந்து எதி­ர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாற வகையில் தேவை­யான நட­வ­­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது'' என்றும் அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.
இதற்­கி­டையில் இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தே­கத்தில் பேரில் கடந்த திங்கட் கிழமை கைது செய்­யப்­பட்ட ஐவ­வ­ரையும் இன்று புதன் கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோலா­லம்பூர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
மலேசி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் தயா கம­கேவை இலங்­கைக்கு வழி­ய­னுப்பும் பொருட்டு கோலா­லம்­பூர் விமான நிலை­யத்­­திற்குச் சென்ற சமயமே இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சாரை வழி­ம­றித்த ஒரு குழு­வினர் அவர் மீது பலத்த தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­த­மை குறிப்­பி­டத்­தக்­க­து.



டாவாஓ: போதை கடத்தல்காரர்கள் கொலை சம்பவம் பற்றி கேள்வி எழுப்புவேன் என்று கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவை தகாத வார்த்தையால் திட்டியதால், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை கடத்தல் அதிகளவில் நடக்கிறது. கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோட்ரிகோ டுடெர்டே, போதை கடத்தல் கும்பலை முற்றிலும் ஒழிப்பேன் என உறுதி அளித்தார். அதனால் அவர் தேர்தலில் வென்று கடந்த ஜூன் 30ம் தேதி அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 2 மாதத்துக்குள் 2,400க்கும் மேற்பட்டோர் போதை தடுப்பு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சட்டவிரோத படுகொலை என மனித உரிமை அமைப்புகள், ஐ.நா உட்பட பல தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது.

சீனாவில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து, அந்நாட்டு அதிபரிடம் பேச தயங்கமாட்டேன். . இது குறித்து லாவோஸில் நடைபெறும் ஆசியான் கூட்டத்தில், பிலிப்பைன்ஸ் அதிபரை சந்திக்கும்போது கேள்வி எழுப்புவேன்’’ என்றார்.  இதற்கிடையே, ஆசியான் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் ேராட்ரிகோ நேற்று லாவோஸ் புறப்பட்டார். அப்போது அவரிடம் ஒபாமா விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரோட்ரிகோ, ‘‘அவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நான் ஒன்றும் அமெரிக்காவின் அடிமை இல்ைல. சுயமரியாதை கொண்ட ஒரு நாட்டின் அதிபர். என்னிடம் கேள்வி கேட்கும் உரிமை பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு மட்டுமே உண்டு. பிலிப்பைன்ஸில் போதை கடத்தல் ஒழிக்கப்படும்வரை, இந்த படுகொலை தொடரும்.  எனது நடவடிக்கையை விமர்சிப்பவர்களிடம் நான் பேச மாட்டேன்’’ என்றார். பின் தகாத வார்த்தையில் திட்டினார்.

ரோட்டரிகோவின் இந்த பேட்டியை அடுத்து, தனது அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். ‘‘ரோட்ரிகோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இருக்காது. எனவே ஆசியான் மாநாட்டில் பிலிப்பைன்ஸ் அதிபருடனான் சந்திப்பு ரத்து செய்யுங்கள்’’ என்றார்.
அதன்பின் ஒபாமாவை தனிப்பட்டமுறையில் விமர்சித்ததற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மன்னிப்பு கோரினார்.



இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, டஜன் கணக்கிற்கும் மேலான எண்ணை கிணறுகளுக்கு வைத்த தீயின் பெரும் பகுதியை அணைத்துவிட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்கய்யாரா பகுதியில் பத்து இடங்களில் தீ அணைக்கப்பட்டு விட்டது. மூன்று இடங்களில் இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
மொசூலில் தெற்கு பகுதியில் இருக்கும் பகுதியிலிந்து அரசு படைகள் ஐ எஸ் அமைப்பினரை விரட்டியடித்ததால், கடந்த மாதம் அவர்கள் இவ்வாறு தீ வைக்கும் செயலில் ஈடுபட்டனர்
உடைந்த எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணைகள் அருகாமையில் உள்ள நதி மற்றும் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் மாவட்டங்களில் புகாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.





புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஐ நா செய‌லாள‌ர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமைக‌ளை த‌னியாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்கு ஐ தே க அர‌சு ஏற்பாடு செய்யாத‌த‌ன் மூல‌ம் இந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌மிழைத்துள்ள‌து.


இந்த‌ நாட்டில் ஆயுத‌ம் தாங்கி போராட‌ம‌லேயே பாரிய‌ உயிர், உட‌மை இழ‌ப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ ஒரேயொரு இன‌ம் முஸ்லிம்க‌ளாகும். அவ‌ர்க‌ள் த‌னியாக‌ பிரித்துப்பார்த்து கொல்ல‌ப்ப‌ட்ட‌தோடு வ‌ட‌க்கிலிருந்து அனைத்தும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌த‌ன் பின் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். அப்ப‌டியிருந்தும் முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளின் த‌னித்த‌ர‌ப்பொன்றை பாங்கி மூனுட‌ன் த‌னியாக‌ ச‌ந்திக்க‌ வைக்க‌ முடியாம‌ல் இந்த‌ அர‌சு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு முதுகில் குத்திய‌மைக்கு கார‌ண‌ம் அர‌சாங்க‌ம் த‌ தே கூட்ட‌மைப்பின் நிக‌ழ்ச்சி நிர‌லுக்கு அடிப‌ணிந்துள்ள‌தா என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்கிற‌து.

பாங்கிமூனை முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌னித்த‌ர‌ப்பு ச‌ந்தித்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌ தே கூட்ட‌மைப்பின‌ர் செய்யும் துரோக‌ங்கள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம் த‌ர‌ப்பை ஓர‌ம் க‌ட்டியுள்ள‌தாக‌வே நாம் பார்க்கிறோம்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் இது விட‌ய‌த்தில் த‌லையிட்டு பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌லில் செய‌ற்ப‌டும் முஸ்லிம் க‌ட்சிக‌ளைச்சேர்ந்த‌ "அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை" ஐ நா செய‌லாள‌ரை த‌னியாக‌ ச‌ந்தித்து முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளையும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்காத‌ அர‌சிய‌ல் தீர்வு குறித்தும் கூறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணிலை கேட்டுக்கொள்கிற‌து.



அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியா அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட   விவகாரம்” பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பும் பணி தொடர்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ் விடயமாக  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.
ஏற்கனவே அவர்  பாராளுமன்றத்தில் வீடமைப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது வீடமைப்பு அமைச்சுக்கு நுரைச்சோலை விவகாரம் தொடர்பில்லை எனவும் மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் தான் அவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதாக அன்று பதிலளிக்கப்பட்டது.
அதனை தொடந்து சட்டத்தரணி சல்மான் எம்.பி அவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அரசாங்க  அதிபருக்கு  உத்தரவிடும் வகையிலேயே கேள்வி எழுப்பவுள்ளார்.

நன்றி - SLMCவெளிச்சம் 



பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது.


குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


குடிபோதையில் இருந்த விமானி 260 பயணிகளின் உயிரை பயணம் வைத்து விமானத்தை ஓட்டுவதறகு முயற்சித்துள்ளார். UL554 என்ற விமானம் அன்றையதினம் மதியம் 1 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்க ஆயத்தமாகியிருந்தது.


அது வரையில் விமானத்தின் பிரதான விமானியாக இருந்த குறித்த விமானி விமானத்தை ஓட்டுவதற்கு முடியாத அளவு மது போதையில் இருந்தமையால், விமானத்தின் துணை விமானிகளும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.


சூழ்நிலையை புரிந்து கொண்ட துணை விமானிகள்? சுகயீன விடுமுறை என கூறி விமானம் ஒட்டுவதனை புறக்கணிக்குமாறு பிரதான விமானியிடம் கோரியுள்ளனர். எனினும் 260 பயணிகளுடன் விமானத்தை பலவந்தமான ஓட்டுவதற்கு பிரதான விமானி முயற்சித்துள்ளார்.


அதற்கமைய அவர் துணை விமானிகளின் கோரிக்கையை கண்டுக் கொள்ளாமல் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளார்.


இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரி, ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரை பாதுகாத்து விமானியை சோதனைக்குட்படுத்தினார்.


அங்கு அவர் சாதாரண அளவைவிடவும் அதிகமாக மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவரால் விமானத்தை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும் விமான சேவை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக குறித்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.
காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.

எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.
அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம் அவர் எந்த அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்...
பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.
அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.

சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு...
மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.

அஷ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனன்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.
அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.
அல்லது கொல்லப்படவேண்டும்.

அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.
இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....
தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....

MARI themes

Powered by Blogger.