Showing posts with label worldnews. Show all posts


பிரித்தானியாவின் சதர்ன் ஹெமிஸ்பயர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் லியாம் டெர்பிஷையர் தூங்கினால் மரணமடையும் வினோத நோயால் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார்.

பிறக்கும் போது இவரது உடல்நிலையை ஆய்வு செய்த, மருத்துவர்கள், சிசிஹெச்எஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 1500 பேரை மட்டுமே தாக்கியுள்ள இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை அவர்கள் தூங்குவதை மறந்து விடும் என்றும் இதனால் இதயம், நுரையீரல் செயல் இழந்து நோயாளி இறக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

லியாம் பிறந்ததில் இருந்து ஜி.எம்.எஸ். என்ற கருவி மூலம் பெற்றோர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மற்ற மாணவர்கள் போல் பாடசாலைகளுக்கு செல்லும் லியாம், தூக்கம் வரும்போது மட்டும் பெற்றோரின் கண்காணிப்புடன் செயற்கை சுவாசம் மூலம் தூங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டன் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

தூதரகத்திற்கு அருகே உள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளதுடன், தூதரத்தில் உள்ள அதிகாரிகளை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்மானில் உள்ள ஒரு குடியிருப்பு மாவட்டமான ரபியா அண்டைப்புற பகுதியில் கடுமையாக பாதுகாக்கப்பட்ட தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வளைகுடா நெருக்கடியுள்ள சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டாரை பிராந்திய நாடு புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இன்றி அந்நாட்டு மக்கள் அவலப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டாரில் சுமார் 27 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான உணவு பிரச்சினை தீர்ப்பதில் கட்டார் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

தொழில் வாய்ப்பு தேடி அங்கு சென்றுள்ள சுமார் 140000 இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கட்டார் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி சவுதி அரேபியா உட்பட நான்கு நாடுகள் கட்டார் நாட்டினை புறக்கணித்தது.

இதன் காரணமாக குறித்த நான்கு நாடுகளிடமிருந்து பொருட்கள் இறக்குமதி, விமான பயணம் உள்ளிட்ட பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக அல்லாஹுவை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார்.

அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் அல்லாஹுவுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.
அதன் விளைவாக "மிகவும் அதிர்ச்சியடைந்த" அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக செளதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று அந்த செய்தித்தாள் மன்னிப்பு கோரியது. அதில் அன்சி, அரசர் சல்மானை 'ஹலீம்' அல்லது மிகவும் பொறுமையானவர் மற்றும் 'ஷ்தீத் அல் இகாப்' என குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டுச் சொற்களுமே அல்லாஹுவை குறிப்பதற்கான சொற்களாகும்.

"இஸ்லாமியர்களின் இரண்டு புனிதஸ்தலங்களாக கருதப்படும் மக்கா மற்றும் மதினா ஆகியவற்றை பாதுகாக்கும் அரசரை குறித்து எழுத்தாளர் அவ்வாறு எழுதியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அரசருக்கு அல்லாஹ் அத்தகைய குணங்களை கொடுத்திருந்தாலும், அவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; இரண்டு புனிதஸ்தளங்களை, இஸ்லாமை, மக்களை, தாயகம் மற்றும் மக்களை காப்பதனால் அல்லாஹ் அவரை பாதுகாக்கட்டும்`` என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

அந்த செய்தித்தாளிற்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சில செளதி ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.


கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது.

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவற்றை நிறைவேற்றுவதற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் அந்த நிபந்தனைகள் தமது நாட்டின் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சர் அல் - தானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு போலி செய்திகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறையில் போலி செய்திகள் வெளியிடுவதற்கு பின்னால் பல்வேறு அரசியல் தேவைகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டார் அரசாங்கம் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் போலி செய்தி வெளியிடப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்தில் தங்கள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தியை சவுதி அரேபிய தேசிய விமான சேவையான சவுதியா நிறுவனம் நிராகரித்துள்ளது.

போலியான செய்திகளை பதிவிடுவதற்கு பலர் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

போலியான தகவல்களை வெளியிட்டு தேசிய விமான சேவையின் பெயரை கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக குறித்த விமான சேவை நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் ரகுமான் அல் தைப் தெரிவித்துள்ளார்.

இறுதியாக சிலர் உண்மையை அறிந்து கொண்டு அதன் உண்மை தன்மையை டுவிட்டர் ஊடாக மீண்டும் பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு போலியான தகவல்களின் பொறுப்புகளை வெளியிடுபவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு சட்டத்தின் முன்னால் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

சோமாலியாவில்  சேவ் தி சில்ரன் (Save the Children) என்ற அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிய் ஆய்வு ஒன்றை நடத்தியது.  ஒன்பது மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது.

உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க சர்வதேச சமூகத்தை சேவ் தி சில்ட்ரன் கோரியுள்ளது.

நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் முகமை தெரிவித்த அடுத்த சில தினங்களில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் 6 முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அமெரிக்காவின் கீழ் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட   உச்ச நீதிமன்றம், 'இந்தத் தடை உத்தரவு மூலம், அமெரிக்கர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. ஆனால், மற்ற வெளிநாட்டினருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தும்.' என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், விசா கட்டுப்பாட்டில் அமெரிக்கா தளர்வு கொண்டு வந்துள்ளது.  நெருங்கிய உறவினரை பார்க்க, தொழில் ரீதியாக அமெரிக்கா வர 6 நாட்டினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மிக நெருங்கிய குடும்ப உறவுகளான, பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், மகன், மகள், மருமகன், மருமகள், சகோதரரின் மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் ரீதியாக வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சீனாவில் விமானத்தின் இன்ஜினில் சில்லரை நாணயங்களை பெண் ஒருவர் வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனாவில் சீனா தெற்கு விமானம்  நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஷாங்காய் மாநகரில் உள்ள புடோங்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Guangzhou-வுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.

அப்போது விமானத்தில் பயணம் செய்யும் கியூய் என்ற பெண் பயணி விமானத்தில் இடது பக்கத்தில் உள்ள இன்ஜினில் சில்லரை நாணயங்கள் சிலவற்றை எறிந்துள்ளார்.

இதைக் கண்ட சகபயணிக் ஒருவர் Qiu விமானத்தின் இன்ஜினில் நாணயங்கள் வீசியதை அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பயணிகள் நலன் கருதி, விமானத்தின் உள்ளே இருந்து 150-பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் விமானத்தின் இன்ஜினை சோதனை செய்ததில் 9-சில்லரை நாணயங்களை அவர் வீசியிருந்தது தெரியவந்தது.

இது குறித்து விமானம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், கியூய் விமானத்தில் இடப்பக்கம் உள்ள இன்ஜினில் சில்லரை நாணயங்களை வீசியுள்ளார்.
விமானத்தின் இன்ஜினை சோதனை செய்ததில் 9 சில்லரை நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தையும் எடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 80 வயது மூதாட்டியே பிரார்த்தனை செய்து நாணயங்களை இப்படி வீசி உள்ளார். பாதுகாப்பான ஒரு பயணத்துக்காக பிரார்த்தித்தேன் என்று , போலீசாரிடம் தன் செய்கைக்கான விளக்கத்தை இந்தப் பாட்டி கொடுத்துள்ளார் . மேலும் அவர் விமானம் எந்த ஒரு விபத்துமின்றி நல்லபடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இது போன்று செய்துள்ளார். மற்றபடி அவர் மீது எந்த ஒரு குற்ற நடவடிக்கைகள் இல்லை, மனநலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை என்று விமான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏ.டி.எம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன.

தேவைப்படும்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது.


உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்ட லண்டன் என்ஃபீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளை
உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டதைக் குறிக்கும், லண்டன் என்ஃபீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளையின் நீல நிறப் பலகை
ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது.

இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏ.டி.எம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டது.

"உலகெங்கிலும் அல்லது பிரிட்டனில் எனது பணத்தை நானே எடுத்துக் கொள்ள ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தோன்றியது" என 2007 ஆம் பி.பி.சிக்கு தெரிவித்தார் பரோன். மேலும் சாக்லெட் வழங்கும் இயந்திரத்தை பார்த்து தனக்கு ஏ.டி.எம் இயந்திரத்திற்கான யோசனை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பார்க்லேஸ் கிளையில் முதல் ஏ.டி.எம் தொடங்கப்பட்டது.

ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு பெரும் விழாக் கோலத்துடன் நிறுவப்பட்டது.
முதல்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து மொரமொரப்பான ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.

அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.
இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன.

தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிவர்த்தனையில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று வருவதற்கு இது வித்திட்டுள்ளது.


கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனின் Bethnal Green என்ற பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த கட்டடத்தில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்ற நிலையில், அந்த புகையை சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

28 வயதான Rosie Amies என்ற பெண்ணே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 72 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பத்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டடத்தின் கூரை வரை பரவியுள்ளது.

எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


புனித மக்காவை தாக்கும் இலக்குடன் தலைமறைவாகி தங்கியிருந்த தற்கொலை தீவிரவாதி ஒருவரை சவூதி பொலிசார் சுற்றிவளைத்த வேளை, தீவிரவாதி திடீரென வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

புனித காபாவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த வெடிகுண்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதியின் தற்கொலையால் சுமார் 11 பேர் வரை காயமுற்றனர், மூன்று மாடி கட்டடம் நொறுங்கியது.

இது தொடர்பில் பொலிசார் சுமார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-விடுதலை நியூஸ்-


தென் ஆப்பிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில் அமைந்துள்ளது லேடி பிரரி என்ற கிராமம். இங்கு 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

இதைக் கண்ட அக்கிராம மக்கள் இதை தீய சக்தி தான் அனுப்பியுள்ளது என்று கூறியதால், அங்கு பீதி நிலவியது.

அதன் பின் இது தொடர்பான தகவல் அங்குள்ள கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் Lubabalo அதை சோதனை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், இது கண்டிப்பாக ஆட்டிற்கு பிறந்தது தான் என்றும், இதில் மக்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த குட்டி பிறக்கும் போதே இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இக்குட்டி ஆட்டின் வயிற்றில் இருந்த போது நோய் வாய்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதன் தாய் ஆடானது ரிப்ட் வேலி என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நோயின் தாக்கம் காரணமாகவே இக்குட்டி இது போன்ற உடலைப்புடன் பிறந்துள்ளது.

அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறியும் மக்கள் நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன.

13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும்.
கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது.
சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன, இதை காத்தார் மறுத்துள்ளது.
இந்த நாடுகள் கத்தார் மீது தங்களுக்கு இருக்கும் குறைகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது புதிராக உள்ளது என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

BBCஇந்தியா
அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 41 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.

மேல்மருவத்தூரில், சென்றுகொண்டிருந்தபோது பேருந்து இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. அதைக் கவனித்த ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் தூரத்தில் சென்றதும் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்துள்ளது. ஓட்டுநரின்  சமயோஜித நடவடிக்கையால், 41 பேருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தனது குடும்பப் பிரச்சினை பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், அந்த நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பொதுமக்களிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார், சிங்கப்பூர் பிரதமர் லீ. அப்போது பேசிய அவர், '38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப இல்லம் தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தப் பூர்வீக வீடு பற்றி கடந்த சில நாள்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. எனக்கும், என் உடன்பிறப்புகளுக்கும் இடையிலான இந்த சர்ச்சை தொடர்பாக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரம், என்னையும் எனது அமைச்சரவையைச் சார்ந்த உறுப்பினர்களையும் நாட்டை நிர்வகித்து வரும் தங்கள் பொறுப்பிலிருந்து நிச்சயம் திசை திருப்பாது என்று நான் உங்களிடம் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்', என்றார். 'சிங்கப்பூரின் தந்தை' என்றழைக்கப்படும் லீ குவான் யூ-வின் மூத்த மகன்தான் இந்த லீ சியென் லூங். நாட்டை ஆளும் பிரதமர் ஒருவர் இவ்வகையான வெளிப்படைத்தன்மையோடும் பொறுப்புஉணர்வோடும் செயல்பட்டது, சமூகத் தளங்களில் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.இந்தியா
ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சியைச் சாப்பிடக் கூடாதா என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று சென்னையில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய விஜயகாந்த், 'இப்போது மாட்டிறைச்சி கூடாது என்று சொல்கிறார்கள். சில நாள் கழித்து கோழி, ஆடு, மீன் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட்டாலும் போடுவார்கள்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'மக்கள் அவரவர் விரும்பும் உணவை உண்ணும் முழு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது' என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் செயல்பாடு குறித்து பதிலளித்த விஜயகாந்த், 'தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமர்வேன்' என தெரிவித்துள்ளார்.


லண்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பான Grenfell Tower-ல் நடந்த பயங்கர தீ விபத்தில் 79-பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்தாவது நபரின் வயது 52 இருக்ககூடும் என்று பொலிசார் தெரிவித்திருந்தனர்.

 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய நபரின் சகோதரர் அங்கு தீயணைப்புத் துறையில் வேலை செய்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் சிக்கிய உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா அல்லது கத்தாருடன் உள்ளீர்களா? என பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கேள்வி எழுப்பி உள்ளது.

அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை 5 அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.

கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கத்தார் பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. இப்போது அந்நாட்டிற்கு தேவையான உணவு பொருட்களை ஈரான் அனுப்பி வருகிறது.

இவ்விவகாரத்தில் துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் உங்களுடைய ஆதரவு யாருக்கு என பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கேள்வி எழுப்பி உள்ளது.

கத்தார் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியிலான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக சவுதி அரேபியா சென்று உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப். அப்போது சவுதி அரேபியா அரசர் சல்மானை நவாஸ் செரீப் சந்தித்து பேசிஉள்ளார்.

இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பின் போது, நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா அல்லது கத்தாருடன் உள்ளீர்களா? என நவாஸ் செரீப்பிடம் சவுதி அரேபியா அரசர் சல்மான் கேள்வி எழுப்பியதாக பாகிஸ்தான் மீடியாவான எக்ஸ்பிர்ஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது.

பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என நவாஸ் செரீப் கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

புனித நூலான திருக்குர்ஆனை கிழித்து அதில் வங்கி   பற்றுச்சீட்டு  அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைசூர் சிவாஜி சாலை கனரா வங்கியில் விநியோகிக்கப்பட்ட செலானின் பின்புறத்தில் திருக்குர்ஆன் வசனம் இருந்துள்ளது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியுற்று உடனே வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர்.

மேலும் அங்கிருந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வங்கி வளாகம் பரபரப்பானது. உடனே அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருக்குர்ஆனை கிழித்து செலான் பிரிண்ட் செய்து வங்கிக்கு விநியோகம் செய்த நவீன் குமார் என்ற அச்சக உரிமையாளரை கைது செய்தனர்.

http://www.oneindia.com/india/mysuru-man-tears-up-quran-to-make-bank-challans-arrested-2462751.html

MARI themes

Powered by Blogger.