இன்று இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய புள்ளிகளாக உள்ளவர்கள் மைத்திரிபால சிரிசேன, மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களாவார்கள்.
முன்பு கட்சிகளுக்குத்தான் ஆதரவாளர்கள் இருந்தார்கள் இப்போது அந்த விடயம் மாற்றத்துக் உள்ளாகியுள்ளதை நாம் அறிவோம்.
நாட்டில் புரையோடிப்போயிருந்த பயங்கரவாத பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக சிங்கள மக்களின் அறுபது சத வீதமானவர்கள் மஹிந்தவை ஒரு ஹீரோவாகத்தான் இன்றும் பார்க்கின்றனர் என்ற விடயம் நாட்டின் தற்போதைய நிலைமையை வைத்து நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
இருந்தபோதும் கடந்த காலத்தில் தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் மஹிந்தவை எதிரியாக பார்க்கத் துவங்கியிருந்தனர். இந்த நேரத்தில் முஸ்லிம் மக்களின் ஆதரவு என்பது இருபெரும் கட்சிகளுக்குமாக இருந்து வந்த நேரத்தில்தான் 2010ம் ஆண்டய ஜனாதிபதி தேர்தலில் ரணில் தலைமையில் வீயூகம் அமைக்கப்பட்டு மஹிந்தவுக்கு எதிராக, பயங்கரவாதத்தை அடக்குவதற்கு முன் நின்றவரும் இராணுவ தளபதியாக இருந்தவருமான சரத்பொன்சேகாவை களத்தில் இறக்கியிருந்தார்கள், அந்த தேர்தலில் மஹிந்தவே வெற்றியடைந்திருந்தார்.
அதன் பிறகு மஹிந்த ராஜபக்ஸ ஏதோ காரணத்துக்காக ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்துக்கு முன்னமே நடத்த தீர்மானித்து 2015ல் தேர்தலை அறிவித்திருந்தார். அதன் பிற்பாடு மஹிந்தவை வீழ்த்துவதற்கு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டு, மஹிந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்களையும் இன்னும் பலரையும் தங்கள் பக்கம் ரகசியமாக இணைத்துக் கொண்டார்கள்.
இந்த விடயம் அன்றய ஜனாதிபதி மஹிந்தவுக்கு தெறிந்துவிடாமலிருக்க மிக ரகசியமாகவே அந்த விடயத்தினை பேணி வந்தார்கள். இந்த விடயமானது மஹிந்தவிடமிருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அவருக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளாராக மைத்திரி மாறும் வரைக்கும் இந்த விடயத்தை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இந்த நேரத்தில்தான் மஹிந்தவை எதிர்த்து பொதுவேட்பாளராக மைத்திரி அவர்கள் களம் இறக்கப்படுகின்றார், அதன் பின் பெரும்பாண்மையான ஐ.தே.கட்சியினதும், தமிழ் முஸ்லிம் மக்களினதும் ஆதரவை பெற்று மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக தெறிவு செய்யப்படுகின்றார்.
அந்த தேர்தலில்  சிங்கள மக்களின் 58லட்சம் பேர் மஹிந்த அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள்.
மைத்திரி அவர்கள் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களினால் ஜனாதிபதியாக தெறிவு செய்யப்பட்டிருந்தாலும், தனக்கு எதிர்த்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் சுதந்திர கட்சியின் தலைவராக பதவியை ஏற்றுக்கொண்டாலும், அடுத்து எதிரே வந்த பாராளுமன்ற தேர்தலை மஹிந்தவை முன்னிறுத்தியே சந்தித்தார், அந்த தேர்தலில் மஹிந்த பிரதமராகும் நிலையிருந்தும் கடைசிநேரத்தில் நடந்த பல திள்ளு முள்ளுகளின் காரணமாக மஹிந்த ஏமாற்றப்பட்டார் இருந்தாலும் அவரது தலைமையில் 96 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெறிவு செய்யப்பட்டனர்.
இந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியோ அல்லது இந்தாட்சி வருவதற்கு முன்னின்ற சந்திரிக்கா அம்மையாரோ சுதந்தி கட்சிக்கு வாக்குகேட்க எந்த மேடையிலும் ஏறவும் இல்லை, ஜனாதிபதி மைத்திரி சு.கட்சி தலைவராக இருந்தும் கூட சு.கட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறவும் இல்லை. மைத்திரி அவர்கள் நான் நடு நிலை வகிக்கப்போகின்றேன் என்று கூறிவிட்டு பேசாமல் இருந்து விட்டார்.
அதன் பிறகு மஹிந்தவின் செல்வாக்கினாலும், அவரது தனிப்பட்ட விடா முயற்சியினாலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு பெற்றுக்கொடுத்தார். இந்த நன்றிகூட இல்லாமல் பின்னாலில் பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்யாத மைத்திரி பக்கம் சென்றதானது, அரசியல் அரங்கில் மிக கேவலமாக பார்க்கப்பட்ட செயலாகும் என்பதை நாம் அறிந்து வருகின்றோம்.
அதன் பின் மஹிந்த அணியென்றும், மைத்திரி அணியென்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் இருந்தாலும் சு.கட்சியின் பெரும்பாண்மையான மக்கள் கட்சிக்கு அப்பால் தனிமனித ஆளுமையை முன்னிருத்தி மஹிந்த பக்கமே இன்றுவரை இருந்து வருகின்றார்கள் என்ற உண்மையும்  நாடரிந்த உண்மையாகும்.

எப்படியோ பாராளுமன்ற தேர்தலை மஹிந்தவை வைத்து ஒப்பேற்றிக்கொண்ட மைத்திரி அவர்கள், பிறகு வரப்போகும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை தனது தலைமையில் நடத்துவதற்கு பின்னிற்கின்றார் என்பதே உண்மையாகும்.
தனது தலைமையில் உள்ளுராட்சி மன்ற  தேர்தலையோ, அல்லது மாகாண சபை தேர்தலையோ சந்திக்கும் போது சு.கட்சி ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவு தெறிவிக்காமல் நாம் படுதோல்வி அடைந்தால் அது அவரின் கௌரவத்தை மட்டுமல்ல, அவர் தற்போது  வகிக்கும் நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியையும் அது பாதிக்கும்.  அது மட்டுமல்ல தான் ஒரு மக்கள் ஆதரவு இல்லாத பொம்மை ஜனாதிபதி என்ற ஏளன பார்வைக்கும் ஆளாகவேண்டியும் வரும் என்ற பயமும் இதற்கு காரணமாகும்.

இந்த நிலைமையை சீர்செய்வதற்கு ஐ.தே.கட்சியும் அவருக்கு  உதவப்போவதில்லை, அவர்கள் அவர்களின் கட்சியின் வளர்ச்சியையே குறிவைப்பார்கள், அதன் காரணமாக மைத்திரி அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் செல்வாக்கு தற்போதைக்கு கிடைக்காது போவதன் காரணமாக தன்னையொரு "டம்மி பீஸாக" உலகமும், நாட்டுமக்களும் தன்னை என்னிவிடுவார்கள் என்ற பயமும் மைத்திரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேர்தல்களை சந்திப்பதற்கு ரணில் அவர்களை விட மைத்திரி அவர்கள்தான் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார் என்பதே தெளிவான விடயமாகும்.  இதன் காரணமாக ஏதேதோ காரணங்களை காட்டி 2019ம் ஆண்டுவரையும் தனது தலைமையில் எந்த தேர்தலையும் சந்திக்க மனமின்றி காலம் கடத்தி வருவதற்கே அவர் முயற்சிக்கின்றார்.
இது எந்தளவு அவருக்கு கைகொடுக்கும் என்பது காலம்தான் பதில் சொல்லும் என்றிருந்தாலும், அவர்களுடைய இந்த செயல்பாடு எதிரணியிரான மஹிந்த அணிக்கு இன்னும் மக்கள் ஆதரவு கூடுவதற்கு ஏதுவாக அமைந்து வருகின்றது என்கின்ற  உண்மையையும் அவர்கள் அறியாமலில்லை எனலாம்.
ஆகவே எதிர்வரும் தேர்தல்கள் ரணிலுக்கோ மஹிந்தவுக்கோ சோதனையாக அமையாது விட்டாலும் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்குத்தான் சோதனையான காலமாக அமையப்போகின்றது என்பதே உண்மையாகும்.
இந்த சோதனைகளை மக்கள் ஆதரவு இல்லாத மைத்திரி அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார் என்பதே தற்போதைக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆயிரம் வோட்ஸ் கேள்வியாகும்.


எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.


பைசர் முஸ்தபா,ஹக்கீம் ,ரிசாட், போன்ற அமைச்சர்களுக்கு இன நல்லுறவுக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பு வலியுறுத்து.

தற்போதைய கல்முனை மாநகரமானது பல்லின மக்கள் வாழும் வாழப்போகும் பிரதேசமாகும், மாத்திரமல்லாமல் நான்கு தனித்துவ உள்ளூராட்சி  மன்றங்களான
1. கரவாகுபற்று தெற்கு
2.கல்முனை பட்டின சபை
3.கரவாகுபற்று மேற்கு
4.கரவாகுபற்று வடக்கு
இவைகள் இணைக்கைப்பட்டே பிரதம அமைச்சராகவும் உள்ளூராட்சி அமைச்சராகவும் பிரமதாச இருந்த போது 1987 ம் மாண்டு கல்முறை பிரதேச சபை உருவாக்கப்பட்டது
பின்னர் பட்டின சபையாகவும் அதன் பின் மாநகர சபையாகவும் இன்று வரை இருந்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் சாய்ந்தமருது எனும் கரவாகுபற்று தெற்கு பிரிந்து செல்ல வேண்டுமென்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் ஏனைய மூன்று உள்ளூராட்சி சபைகளும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டு்ம், அப்போதுதான் அறியாச் சிக்கலுக்குள் மாட்டி இருக்கின்ற கல்முனையின் தமிழ் முஸ்லீம் மக்கள் நிம்மதி யாக உலகம் முடியும் வரை வாழ்வதற்கான வழியை பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு இருக்கின்றது.

இவ்வாறு இன்று கல்முனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இன நல்லுறவுக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பினர் தெரிவித்தனர்
இதன் சார்பாக கல்முனையின் சமுக ஆர்வலர் நஸீர் ஹாஜி மற்றும் கலாநிதி எஸ்.எல். ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கருத்து வெளியிடுகையில்
கல்முனையின் இன்று வாழுகின்ற மக்களின் இனப்பரம்பலின் விகிதாசார சமநிலையை குழைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.
ஏன் மருதமுனைக்கு நகர சபை வழங்க முடியாது?
தமிழர்களுக்கு நகரசபை ஒன்றை வழங்க முடியாது?
இதன் மூலம் அங்கு வாழுகின்ற எல்லா மக்களுக்கும் வளம் கொழிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது
தக்க தருணத்தில் நான்கு சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் அதன் யதார்தத்தை மக்களை விடவும்  மனச்சாட்சியான அறிவுடைய தலைவர்களாக இவர்கள் இருப்பின் இவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதே எமது எதிர்பா்ப்பாகும்.
அரசியல் லாபங்கள் இந்த சமுகத்தை வாழ வைக்காது
போலி வேசங்கள் களையப்பட்டு சுயரூபம் வெளிவரும்

அப்பாவி சாய்ந்தமருது மக்களின் ஐந்து அல்லது ஆறாயிரம் வாக்குகளை பெறும் எண்ணத்தில் ஒட்டு மொத்த மக்களையும் ரிசாட்டும் , ஹக்கீமும் சமுகத்தின் மீது விளையாட வேண்டாம்
இவற்றை கலந்தாலோசனை நடாத்தி முடிவுகள் பெறாமல் போனால் உயர் நீதிமன்றம் செல்ல நாம் ஆலோசித்து வருதாக  குறிப்பிட்டனர்.


ரவி கருணா நாயக்க இராஜினாமாவைத் தொடர்ந்துபுதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாறப்பன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களிடம் இருந்து அதற்கான நியமனப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார்.

-விடுதலை நியூஸ்-20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோவதை ஆதரிக்க முடியாது.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

13வது திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில்தான் ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 20வது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் இதுவரை மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாகாண சபைகளை கலைப்பதற்கான பணிந்துரை இல்லாமல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு இவ்வதிகாரம் பறிபோகும் நிலைமை ஏற்படவுள்ளது. எனவே, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் பறிகொடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு நாம் துனைபோக முடியாது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்;.
தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் நேற்று(13.08.2017) தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரின் மக்கள் காரியாலயத்தில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....
13வது திருத்த சட்டத்தின் படி மாகாண சபைகளின் பெரும்பாலான உச்ச அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என வட கிழக்கு மாகாண மக்கள் கோரிக்கை விடுத்து வரும் இக்கால கட்டத்தில் 13வது திருத்த சட்டத்தில் உள்ளவற்றையும் மத்திய அரசாங்கத்திடம் வழங்கும் இம் முயற்சிக்கு நாம் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்க முடியாது.
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களின் காலங்களை 2 வருடங்களுக்கு நீடிக்க வேண்டும், இப்போது பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் இருக்க வேண்டும் முதலமைச்சர் பதவி எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சுயநல எண்ணங்களை விட நமது மாகாண சபைகளிடம் இருந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகின்ற வரலாற்று துரோகத்தை இழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு குறிப்பாக வட கிழக்கு அரசியல் கட்சிகளின் தலைமைகளும், மாகாண சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். இரண்டு வருடங்கள் கால நீடிப்புதான் வேண்டும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோவதால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்ற மனோநிலைமையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.


அன்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சியோடு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை 02 வருடங்கள் நீடிப்பதாக தெரிவித்தார். இதேவேளை அதி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற் சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரிய நேரத்தில் மாகாண சபைகளை கலைத்து தேர்தல்கள் நடாத்தப்படும் என தீர்மாணிக்கப்பட்டது. அத் தீர்மானத்தினை தேர்தல் ஆணையாளர், பிரதமருக்கும் அனுப்பிவைப்பதாக செயல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளும் கட்சியில் நாம் இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் இவ்வாரான நமது அதிகாரப் பறிப்பினை எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோர்க்கும் உள்ளது.
கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த போதும் கடும் போக்காளர்கள் உள்ள நிலையிலுமத் பிரதேச சபை திருத்தச் சட்ட மூலம், நாடு நகர திருத்தச் சட்ட மூலம் என்பதனை தியாகத்துடன் எதிர்கொண்டு கிழக்கு மாகாண சபை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இச் சட்ட மூலங்கள் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் அநியாயங்களுக்காக குரல் கொடுத்து மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பிய வரலாறு கிழக்கு மாகாண சபைக்கு உள்ளது. இதனால் முழு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படவிருந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தினோம். அதேபோல் 20வது அரசியல் சரத்தினால் நமது மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசிடம் பறிபோவதை எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
தேசிய காங்கிரஸ் எப்போதும் நமது சமூகத்தின் நலனுக்காக யதார்த்தபூர்வமான கருத்துக்களை வெளிப்படையாக மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கட்சியாகும். நமது மக்களின் நலனுக்காக தேசிய காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேசிய காங்கிரஸ் கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கூடிய விரைவில் மலர இருப்பதாக பரவலான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சாய்ந்தமருதுக்கு அதிகாரம் வழங்கியது மு.காதான் என முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் இல்லை மக்கள் காங்கிரசின் முயற்சியால் கிடைத்தது என மயில் போராளிகளும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை அதிகாரம் கிடைக்க வேண்டும் என முதன் முதலில் முயற்சித்தது தே.காங்கிரஸ் என குதிரையின் ஆதரவாளர்களும் அந்த வெற்றிக்கு உரிமைகொண்டாடும் படலம் இப்போது ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகத்தை கொண்டுவந்து சாதித்ததுடன் மட்டுமல்லாது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வர வேண்டும் என்று முதன் முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் சாய்ந்தமருதின் நலனில் கூடிய கரிசனை கொண்டவராக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல் எம்.அதாவுல்லா இருந்தார் என்பதை யாராலும் எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. குதிரையை அவ்வளவாக ஆதரிக்காமல் விட்டாலும் சாய்ந்தமருதுக்கு தனது சேவையை சிறப்பாக செய்தவர் என்றால் அது மு.அமைச்சர் அதவுல்லாஹ்வையும் அவரது கட்சியையும் குறிப்பிட்டு கூறலாம். அதற்க்கு சாட்சியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லை வீதியை காபட் இட்டது முதல் உள்ளூர் வீதிகளை கொங்கிரீட் விதிகளாக மாற்றியமைத்து முதல் சாய்ந்தமருது வைத்தியசாலை,பாடசாலை கட்டிடங்கள் என்று உள்ளது.
மு.அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை நிறுவ சகல ஏற்பாடுகளையும் முடித்து விட்டு வர்த்தகமானி அறிவித்தல் வருவதற்க்கு முன்னர் கிழக்கின் முக்கிய அரசியல் கட்சியான மு.கா தடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். இதனடிப்படையில் நோக்கினால் இன்று அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் அன்றைய ஆட்சி மாற்றத்திக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கு வரவிருந்த தனியான பிரதேச சபையை தடுத்து நிறுத்தியவர்கள் என்பது உண்மையாகிறது. (பகிரங்க குற்றசாட்டை மு.கா எந்தவிதத்திலும் மறுக்கவில்லை,மௌனமாக இருந்து அந்த செய்தியை உண்மை என ஏற்றுகொண்டது.)
பிரதேச வாதம் பேசி அரசியல் நடத்தும் அரசியல் கும்பல்களும் அரசியல் கொந்துராத்து க்காரர்களும் தமது அரசியல் இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்ள இன்று சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வர காரணம் நாங்கள் தான் என பகிரங்கமாக சன்டையிட்டு சமூக வலைத்தளங்களை நாரடிப்பதை பார்க்கின்ற போது வேடிக்கையாக உள்ளது.
சாய்ந்தமருதுக்கான சபை மலரும் என கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மு.காவின் மேடையில் பிரதமர் வாக்குருதியளித்திருந்தார் அத்துடன் ,கல்முனை,சம்மாந்துறை மாநகரங்களை அபிவிருத்தி செய்து தரப்படும் என மேலும் தனது வாக்குறுதியில் சுட்டிகாட்டியிருந்தமையும் இரண்டு வருடங்கள் கடந்து மூன்றாம் வருடமும் இன்னும் சில நாட்களில் கடந்து போக இருக்கின்ற போதும் அந்த வாக்குறுதிகள் காற்றிலையே இருக்கின்றதே தவிர செயலில் இல்லை. என்றாலும் பிரதமர் வாயிலால் அந்த வாக்குறுதியை வழங்கச்செய்ய மு.கா தலைமை எடுத்த முயற்சியை பாராட்ட வேண்டும்.
அது மட்டுமின்றி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்களிடம் இந்த சபையின் முக்கியத்துவம் பற்றி விளையாட்டு பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் எடுத்துக்கூறி இதற்கான முயற்சியில் கடுமையாக பாடுபட்டதையும் இங்கு யாரும் மறைக்க முடியாது.அத்துடன் நில்லாது இப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடமும் இதற்கான முயற்சிகளை மு.கா தீவிரமாக செய்துவந்ததை ஊடகம் வாயிலாக உலகமே அறியும்.
இவை அனைத்தும் ஒருபுறமிருக்க அமைச்சர் ரிஷாத் அவர்களின் கட்சியான மக்கள் காங்கிரசிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் 33000க்கும் அதிகமான வாக்குகளை வழங்கியிருந்ததனால் அவர் நன்றி மறவாமல் அந்த மக்களுக்கு சேவை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவரின் அமைச்சின் ஊடாக தொழில் நிறுவனங்களும் அமைத்து அத்துடன் சில கட்சி போராளிகளுக்கும் வேலைவாய்ப்புகள் என்றும் வழங்கி அம்பாறை மாவட்ட மக்களுக்கு தன்னால் ஆன சிறிய நன்றிக்கடன் செய்துள்ளார். அவரது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனம் இப்போது கைகூடி வந்துள்ளதாக சந்தோஷ அறிக்கைகள் உலா வர ஆரம்பித்துள்ளது.
இந்த சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனத்தில் எங்கள் பக்கம் தான் வெற்றி என மு.காவை போல மக்கள் காங்கிரசும் சொந்தம் கொண்டாடினாலும் அதன் உண்மையை குறித்த அலுவலகர்களும்,அரசியல்வாதிகளும் அல்லாஹ்வுமே அறிவான். இந்த சாய்ந்தமருது சபை மலர வேண்டும் என்பதில் சாய்ந்தமருதின் சகல அரசியல் பிரமுகர்களும் கட்சிபேதங்களுக்கு அப்பால் ஒரே சிந்தனையில் இருந்தமை இங்கு பாராட்டப்பட வேண்டியது.
இந்த சபையை கொண்டுவர மக்கள் காங்கிரசும் பல தியாகங்களையும்,முயற்சிகளையும் தொடர்ந்தும் எடுத்து வந்துள்ளது.இதன் உச்ச கட்டமாக இப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை உலங்கு வானூர்தி மூலம் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து அமைச்சர் ஹக்கீம் புகைப்படம் எடுக்கத்தான் என்னிடன் வந்தார் ஆனால் அமைச்சர் ரிசாத் சபை எடுக்க என்னிடன் வந்தார் என கூறவைத்து ஹீரோவும் ஆனார்.
எது எதுவாக இருந்தாலும் அதாவுல்லா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான தனியானஉள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரிஷாத் பதியூதின் அவர்களின் தலைமையிளாலான மயில் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் ஹக்கீம் தலைமையிலாலான மரக்கட்சியும் பல தடைகளையும் தாண்டிய முயற்சியினால் கொண்டுவரப்படும் உள்ளுராட்சி சபை அங்கீகாரத்தை நாம் பூனைக்கு மணி கட்டியது யார் என சண்டையிடாமல் மனமாற பாராட்டி வரவேற்போம்.
சாய்ந்தமருதுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டு்ம் என்று முதலாவது என்னிய மக்கள் தலைவன் என்றால் அது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையே சாறும் . இரன்டாவதாக அமைசச்சர் ரிஷாத் அதே பாணியில் பயணித்து சாய்ந்தமருதுக்கான அதிகாரம் வழங்க கடந்த பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருதில் தமது செல்வாக்கை செலுத்தி போராடினார் என்றாலும் வியாபார அரசியலுக்கு மயங்கிய மக்கள் அந்த போராட்டத்தை நிராகரித்து அதாவுள்ளஹ்வையும்,ரிசாத்தின் கட்சியையும் மண்கவ்வ செய்தனர்.
சிலரின் முயற்சியினாலும் பாரிய சதியினாலும் மஹிந்த ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நன்றி மறந்த சமூகம் அதாவுள்ளாவையும் புறந்தள்ளி சமூக துரோகி என்ற பட்டத்தையும் வழங்கியது. ஆனால் இன்று அம்பாறையில் கையாளாகாத அரசியல்வாதிகளினால் அம்பாறை முஸ்லிங்கள் கைசேதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் யாரோ பிரசவிக்கும் பிள்ளைக்கு தனது இனிசியலை இட முன்னே வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
என்றாலும் எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலங்களில் சாய்ந்தமருதுக்கு யார் உண்மையான அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தார்கள் என்பதை அல்லாஹ் நம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டுவான். (கத்தரி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்..... )
என்றாலும் சாய்ந்தமருது மக்கள் யார் குத்தினாலும் அரசி வந்தால் சரி என்றிராமல் இனியாவது சரியானவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு தமது மண்ணை வளப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

ஹுதா உமர்
தலைவர்,அல்-மீஸான் பௌண்டசன்
இலங்கை.


“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும்” என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய அரசியல் அதிகாரம் என்பது, கடந்த கால ஆட்சிகளிலே பெரும் போடுகாய்களாக எங்களுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்கு, நாங்கள் போய் ஒரு சரணாகதி அரசியல் செய்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்ட காலங்களில் வருகின்ற போது, கட்சி போராளிகள் தைரியமாக இருக்கின்றார்கள் என்றே வந்தோம்.

கல்குடா, காத்தான்குடியில் தாங்கள் அபிவிருத்தி செய்தோம் எனக் கூறும் அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை காட்டிக் கொடுத்து தான் அரசியல் செய்தார்கள். எனவே அதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பங்கு உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விரட்ட வேண்டும் என்றுதான் அந்த அந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இவற்றையெல்லாம் கொண்டு வந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரசியல் அந்தஸ்த்தில் உள்ள அனைவரும் முஸ்லிம் காங்கிரஸின் அறிமுகத்தில் வந்தனர். காங்கிரஸை ஒரு பிஸாசாகக் காட்டி, தங்கள் பிரதேசத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டு வருவதன் மூலம் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பல விதமாக இந்த விடயங்களை செய்கின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) செய்த வேலைகளை தற்போதைய முதலமைச்சர் நசீர் அஹமட் செய்யவில்லை என்று சொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றை அவர்கள் மறந்து விடக் கூடாது.

பிள்ளையான் முதலமைச்சராக வருவதற்கு முன்னர் முஸ்லிம் முதலமைச்சரை கொண்டு வருவோம் என்று காங்கிரஸுக்கு கடைசி நேரத்தில் கழுத்தறுத்துப் போன காத்தான்குடி அரசியல் பிரமுகருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு வந்த ஆட்சியில், கூடுதலாக முஸ்லிம் உறுப்பினர்களுடன் வந்தால் முதலமைச்சர் தருவேன் என்று, மஹிந்தவிடம் பொருத்தம் எடுத்து விட்டு போய் தான் அந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். இதனை முறியடிக்க எனது நாடாளுமன்ற ஆசனத்தை துறந்தேன்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையை கேட்காமல் பதவி துறந்தார்.

அந்த பெரிய சாகச வித்தைகள் எல்லாம் செய்து காட்டி, முதலமைச்சர் நசீர் அஹமட் கட்சிக்குள் நுழைந்த போது கட்சியை தோற்கடிக்க பல நாடகங்கள் நடாத்தினர். இன்னும் அந்த நாடகம் தொடர்கிறது.

கல்குடாத் தொகுதியில் குடிநீரை அறிமுகம் செய்து வைக்கப் போகின்றோம் என்று பேசிய போது. அதனை ஏளனமாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.

அத்தோடு காத்தான்குடியில் தனியான பாரிய கழிவு நீர்த் தொகுதி ஒன்றை ஏறத்தாள பதினையாயிரம் மில்லியனுக்கு மேலான செலவில் அமைப்பதற்கு அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்து, அதற்கான ஒப்பந்தமும் ஓரிரு மாதங்களில் கைச்சாத்திடப்படவுள்ளது.

மட்டக்களப்பு மவட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முன்கொண்டு செல்வதில் கட்சிக்கு வெளியில் இருந்து வந்த பிரமுகர்களின் பங்களிப்பை மறந்து விடக் கூடாது.


அண்மையில் பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அ.இ.ம.கா வினரும் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்கின்றனர்.

இன்னும் நகர சபை வரவில்லை.

அ.இ.ம.கா மற்றும் மு.கா. இணைந்து சாய்ந்தமருது நகர பை கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள்.

உங்கள் நிலைப்பாட்டை பகிரங்மாக கூறுங்கள. மக்களை கட்சி ரீதியாகவும் ஊர் ரீதியாவும் பிரித்து எமது ஒற்றுமையை சீர் குலைக்காதீர்கள்.

அத்தோடு கல்முனை மாநகரத்தை இன்னும் எத்தனை துண்டுகளாக பிரிக்க தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதையும் கூறுங்கள்.

மருதமுனைக்கான உள்ளூராட்சி மன்ற தேவையும் நீண்ட நாட்களாக உணரப்பட்டு வருகின்றது. அதையும் இப்போதே தீர்ப்பீர்களா? அல்லது மீண்டும் இரு ஊர்களையும் மோத விட்டு குளிர்காய போகிறீர்களா?

நாங்கள் கூறி நீங்கள் கேட்க போவதில்லை. உங்களுக்கு வாக்களித்ததை தவிர எமது மக்கள் வேறு எந்த தவறும் செய்யவுமில்லை.

தயவு செய்து நற்பிட்டிமுனை மக்களையும் எங்களோடு பகைமை படுத்தாமல் அவர்களோடும் தமிழர்களோடும் பேசி சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு நிரந்த தீர்வினை முன்வையுங்கள் என்று பணிவுடன் கேட்கின்றேன்.

15 மிக பெரிய நகரங்கள் ஒன்று சேர்ந்து கொழும்பு என தங்களை பெருமையுடன் அழைக்கும் போது 7 நகரங்களில் வாழும் ஈமான் கொண்ட மக்களை ஒற்றுமையாக நிருவாகிக்க முடியாமல் கூறுபோடும் கேவலமா தலைமைகள் நீங்கள்.

கல்முனையை துண்டாடும் உங்கள் தூரோகத்துக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

S. L. Riyas
Secretary General
National Democratic People's Alliance


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், நாளை மறுதினம் சிறிகொத்தவில் கூடவுள்ள ஐ.தே.க.வின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்­படும் 42 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் உறுப்­பு­ரிமை பெற்றுக் கொள்ள உள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி மீது ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியும் பொது ஏமாற்­றுப்­போக்­குமே இதற்கு பிர­தான கார­ணங்­க­ளாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.நல்­லாட்சி என்று அழைக்­கப்­ப­டு­கின்ற  ரணில் - மைத்­தி­ரியின் கூட்­டாட்சி தொடர்பில் பொது மக்கள் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர். நாட்­டிற்கு மாற்று அர­சியல் சக்தி ஒன்றின் தேவை அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யாக வெளிப்­பட்­டுள்­ளது. பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து விலகி செல்ல கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே கூட்டு எதிர் கட்­சியில் இருந்து செயற்­பட்டோம். ஆனால் தற்­போது அந்த நிலைப்­பாட்டில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தொடர்ந்தும் தெளி­வுப்­ப­டுத்­து­கையில்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்ற கட்­சியின் தவி­சா­ள­ராக முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளார். அந்த கட்­சியில் உறுப்­பு­ரி­மையை பெற்று எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கை­களை தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சியின் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் இணை­வ­தற்கு தீர­மா­னித்­துள்­ளனர்.

மிக விரைவில் இதற்­கான அறி­விப்­புகள் விடுக்­கப்­படும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை பொறுத்த வரையில் ஆட்சி பீடம் ஏறும் முன்னர் வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் அனைத்தும் புறம்­தள்­ளப்­பட்­டுள்­ளன. நல்­லாட்­சியில் கூட்­டணி அமைத்துக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இன்று அனைத்­தையும் மறந்து செயற்­ப­டு­கின்­றது. கட்­சியின் கொள்கை மற்றும் ஆத­ர­வா­ளர்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகும்   நிலை­யி­லேயே சுதந்­திர கட்சி ஆட்­சியில் உள்­ளது.

மறு­புறம் தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்யும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு அடி­ப­ணிந்தே அர­சாங்­கத்தில் உள்ள சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இவர்­க­ளுடன் தொடர்ந்தும் ஒன்­றித்து பய­ணிக்க இய­லாது. எனவே தான் கூட்டு எதிர் கட்­சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து  விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்காக எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் அதனை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்  என்றார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக மஹிந்த அணியினருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அதிருப்தி அடைந்துள்ளது.

இதன்கீழ் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருடன் இணை அரசாங்கத்தில் இருந்தால் தாம் பதவி விலகப் போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சட்டத்தரணி ஆஷிக் அலியார்

அன்றைய வன்னி விஜயமும் மக்கள் சந்திப்பும் தேசிய காங்கிரஸ் வரலாற்றில் பாரிய திருப்பு முனையை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சென்ற காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் பெரும்பாலும் கிழக்கை முழுமைப்படுத்தி இருந்த போதிலும் ஏனைய பிரதேசங்களிலும் தனது அரசியல் அதிகாரங்கள் ஊடாக மக்கள் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளமையும் யாவரும் மறுப்பதற்கில்லை.

அதாவுல்லாஹ் என்ற ஆளுமை இலங்கையில் இன முரன்பாடுகள் ஏற்பட்ட போதெல்லாம் ஒரு சாத்வீகமான அமைதியான போக்கு ஒன்றினை கடை பிடிப்பது வழமை. இது தலைமைத்துவ பண்பின் ஓர் அங்கமும் அடையாளமும் என்றே நோக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் கூட ஏற்படுத்தப்பட்ட இன முரண்பாடுகளை அதாவுல்லாஹ் சமயோசிதமாகத்தான் கையாண்டு வந்தார்.
இது சுயநல அரசியலை விட்டும் நெறிப்படுத்தப்பட்ட அதாவது பிரதேசவாத, இனவாத மற்றும் மக்களை உணர்ச்சியூட்டும் சிந்தனை வாத அரசியல் களத்தில் இருந்து சற்று வித்தியாசமான அனுகு முறைதான். இது உணர்ச்சியூட்டப்பட்ட , ஆத்திரப்படுத்தப்பட்ட மக்களிடையே சென்றடைவதற்கு சற்று காலம் எடுக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்து ஓய்ந்துள்ளது.

உதாரணமாக அன்றைய தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிலத்துக்கு நிலம் மாற்றீடாகவும், கட்டிட நிர்மானச்செலவும் வித்தியாசமான முறையில் ஏற்படுத்தப்பட்டு இருந்த போதிலும் அன்றைய அரசியல்வாதிகளின் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல் மற்றும் இராஜதந்திர உக்திகள் பற்றிய அறிவீனத்தாலும் அதாவுல்லாஹ்வை மக்களைக்கொண்டும். மக்களை மக்களைக்கொண்டும் மடையர் ஆக்கியவர்கள் இன்று புது வேடம் தரித்துக்கொண்டு அரசியல் நடாத்துவது புதுமையளிக்கிறது.

இறக்காமம் மாயக்கல்லி மலை சிலை வைப்பு மற்றும் முழு கிழக்கு மாகாணத்தின் 247 இடங்களை தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடமாக 2014.10.10 வர்தமானி அறிவித்து இருந்ததையும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லீம் கரையோர பிரதேசத்தில் 86 இடங்களில் பொளத்த தடயங்களை நிறுவதற்கும் முன்னறிவிப்பு செய்திருந்ததை அதிகாரத்தில் இருந்து குறித்த அரசாங்கத்தின் தலைமைகளுக்கும், புலமைவாதிகளுக்கும் தெளிவுபடுத்தி அதனை தடுத்தும் தற்போது மீண்டெழுந்து வந்த அதாவது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் எல்லைக்கிராமங்களில் எற்பட்டிருக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றங்கள் மற்றும் கிழக்கின் இன்னோரன்ன பகுதிகளை சொந்தமாக்கி கொள்ள துடித்த வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்கள் போன்ற அதே ஒத்த பிரச்சினைகளுக்கு சங்கைக்குரிய கண்டி மகாநாயக்க தேரரிடம்  20.05.2017 அன்று சென்று சந்தித்து தெளிவுபடுத்தி இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இக் கருத்தியல் அரசியல் செயற்பாட்டில் எம் சமூக மக்களின் எண்ணங்களை சிதறடிக்க அபிவிருத்தி என்ற போர்வையில்
சம்மாந்துறயை - பஹ்ரைனாகவும்,
கல்முனையை - டுபாயாகவும் மற்றும் பாவம் பொத்துவில் மக்கள் அவர்களுக்கு கடல் நீரை கடலில் இருந்து எடுத்து நன்னீராக்குவதாகவும் என்று விசமத்தனமான நச்சுக்கருத்துக்களை கூறி மக்களை அபிவிருத்தி மழையில் நனையவைப்பதாக நினைக்க வைத்துக்கொண்டு மக்கள் குடங்களில் உள்ள குடி நீரையே சமூகத்தின் மயக்க நிலை போக்க தெளித்துக் கொண்டிருக்கிறது உரிமை பெற்றுத்தர வந்த கட்சி யொன்று.

அதாவுல்லாஹ் அரசியல் அரங்கில் செய்யாத அபிவிருத்தியையா? இந்த பெரும் தலைவர் அஷ்ரபின் வொஷியத்தை மறந்த அரசியல் வாதிகள் நிகழ்திவிட்டார்கள். இதெல்லாம் வெறும் கண் துடைப்பு மக்காள்..

உண்மையில் முஸ்லீம் உரிமை அரசியலில் அதாவது முஸ்லிம்களுக்கான அதிகாரப்பங்கினை அரசியலமைப்பு சட்டத்தில் கோரி நிற்க வேண்டிய காலகட்டத்தில் சும்மா பகல் கனவு கண்டு கொண்டு திட்டங்களாய் முன்மொழிவது பிற சமூகங்களிடமிருந்து நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களின் அரசியல் இயலாமைகளில் உங்களுக்கு வேறு உவமானங்கள் கிடைக்காமல் போனதும் நியாயம் தான்.

இன்னும் யாரை ஏமாற்ற? இந்த கிழக்கின் அம்பாரை மாவட்ட முஸ்லீம் மக்கள் தங்களுக்கான ஆளுமையுள்ள அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி விட்டார்கள் இது முழு கிழக்கிலும் வெடித்து கிழக்கைத்தாண்டி வடக்குக்கும் சென்றுவிட்டது. இது ஒரு புரம் இருக்க மக்கள் நம்பிக்கொண்டிருந்த பழைய போலி  ஏற்பாடுகளை பகிஷ்கரிக்க வெகு நாட்களும் தூரமில்லை உணர்ந்தும் விட்டார்கள்.

இதன் பிரதிபலிப்புத்தான் 10.07.2017 ம் திகதி முல்லைத்தீவு முள்ளியவளை காத்தான் விநாயகர் சந்தியில் இருந்து கூலான் குடியிருப்பு பகுதி வரை உணர்ச்சியூட்டப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்டனப் பேரணியில் முஸ்லீம் சமூகம் அடாத்தாக தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்டு காடழிப்பு செய்வதாகவும் மற்றும் குடியேறுவதாகவும் என்று வலைதளங்கள் மற்றும் முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்புகளை கோவை செய்து வெளியுலகத்துக்கும் இந்துத்துவ தமிழ் தேசியத்துக்கும் அறிக்கைப்படுத்தி இருப்பது தூய தமிழ் தேசியத்தில் இருந்து மறுபட்ட விளைவுகளை உண்டு பண்ணிவிடும் என்றுதான் அதாவது தூய தமிழ் தேசியத்தில் முஸ்லீம்களுக்கான உரிமை பற்றிய போராட்டம் பற்றிய கருத்தியல் உள்ளது.

மாறாக இந்துத்துவ தமிழ் தேசிய வாதத்தில் அன்றாடம் வாழ்வதற்கான வாழ்வியல் போராட்டம் தான் உள்ளது. அதாவாது இந்தியிவில் முஸ்லீம்களுக்கு நிகழ்வது போன்று இலங்கையிலும் ஏற்பட்டு விடும் என்று ஊகித்துதான் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அசிங்கத்திலுமான அசிங்கத்தை களையவே அதாவுல்லாவின் வடக்கு விஜயம் இருந்தது. இதுதான் உண்மைக்கு உண்மையான தூர நோக்கு உள்ள அதாவுல்லாஹ் போன்ற அரசியல்வாதியின் சிந்தனையும் கூட புரிதல் உள்ளவர்களுக்கு மட்டும் புரியும்.

இதற்கமைவாக 21.07.2017 அன்று நிறையவே தமிழ் சகோதரர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்கப்பட்ட தருணங்கள் அது. இவ்வாறன உண்மைகளை இன்னும் ஏன் தலைவர் வெளிபடுத்தாமல் இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை. அவருக்கு ஆர்பாட்டம் செய்ய சொல்லிவிட்டு பின்னால் இருந்து கொண்டு அரசியல் செய்வது பிடிக்காமையோ தெரியாது.

இதைவிடுத்து எம் அரசியல் ஞானிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் ஏராளம் றிசாத்தின் வாக்கு வங்கி சூரையாடப்பட்டமை மாதிரியான ஓவ்வாமை கருத்துக்கள் பல போராளிகளால் எய்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கையில் தமிழர்கள் தமிழர்களின்  கிழக்கு தலைமையை வடக்கு மக்கள் நிராகரிக்கும் போது கிழக்கு முஸ்லீம் மக்கள் மட்டும் வடக்கு மற்றும் மத்திய தலைமைகளை இன்னும் நாடி நிற்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

இருப்பினும் வட புல முஸ்லிம் சகோதரர்கள் அன்று புலிகளின் ஆயுத முனையில் இரவோடு இரவாக சுமார் 1200-1700 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பிற மாகாணங்களில் சிதறி அகதியாகி சொல்லொண்ணா துயரங்களை கடந்து தற்போதைய நாட்டின் சுமூக நிலையை உணர்ந்து தற்போதைய தங்களுடைய இனப்பரம்பல் விகிதத்துக்கு அமைவாக தங்களின் வாழ்விடங்களை நோக்கி செல்வது அடாத்தாகவும், அபகரிப்புக்காகவுமா செல்கிறார்கள் இது என்ன நியாயம்?

அன்று புலிகள் செய்ததும் ஒர் இன அழிப்பு இன்று பேரணி ஊடக வாழ்விடங்களை நோக்கி வரும் மக்களை தடுப்பதும் மற்றும் வெளி உலகுக்கு முஸ்லீம்களை பிழையாக திரையிட்டுக்காட்டுவதும் ஒரு வித இன அழிப்புத்தான் என்பதை விளக்கி கருத்தியல் அரசியல் ஊடக புரிதலை எற்படுத்திய பயணம் தான் வடக்குப் பயணம் என்பதை அரசியல் வாதிகள் தங்களின் கருத்தாண்மையற்ற கட்சியின் போராளிகளுக்கு விளக்கி வையுங்கள். இதையாவது சமூகத்துக்காக செய்யுங்கள்.

முஸ்லீம் அரசியல் வேடம் தாங்கிய போலித்தலைமைகளை வெளியேற்ற தன்மானமுள்ள வீரமிக்க இளைஞர்களே!!
அணி திரள்வீர்.

தேசியகாங்கிரஸ்
அம்பாறை மாவட்ட
இளைஞர் அமைப்பாளர்


கடந்த பல வருடங்களாக வடக்கிலும்,கிழக்கிலும் மக்களை நிம்மதியாக இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிய சிலர் இன்று தமிழ் மக்களை பார்த்து பரிதாவ கண்ணீர் விடுவதை பார்க்கின்ற போது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது.

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியிருந்த முன்னாள் பிரதியமைச்சர் ஒருவர் கிழக்கில் ஆட்சி செய்கின்ற முஸ்லிம் முதலைமைச்சர் தமிழ் பேசும் தமிழர்களை திட்டமிட்ட சகல விடயங்களிலும் புறக்கணிப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மக்களால் தமிழின துரோகி என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் ஆயுத முனையில் செய்ய முடியாது போன சில விடயங்களை இப்போது செய்ய முடியும் என பகல் கனவு காண்பது வேடிக்கையாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 11ஆசனங்களை கைப்பற்றிய தமிழ் கூட்டமைப்பு ஆட்சியமைக்காது முஸ்லிம் காங்கிரசிடம் முஸ்லிம் ஒருவரை முதலைமைச்சாராக்கியது தப்பு என கருத்துப்பட தனது நச்சுக்கருத்துக்களை அப்பாவி மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் ஒற்றுமையை சீரளிக்கலாம் என நினைப்பது மடமைத்தனமாகும்.

கடந்த கால கருப்பு தினங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அண்ணன் தம்பியாக பழக ஆரம்பித்திருக்கும் மக்கள் மத்தியில் வேற்றுமை கருத்துக்களை விதைத்து மக்களை முட்டாள்களாக்கி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள எடுக்கின்ற முயற்சிகளை இனிவரும் காலங்களில் கைவிடுவது நன்று என ஆலோசனை கூற விரும்புகிறேன்.

முதலில் அமைந்த கிழக்கு மாகாண சபையில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் உங்களுடைய பால்ய சினேகிதன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திர காந்தனுக்கு முதலைமச்சர் பதவியை வழங்கியபோது எந்த முஸ்லிம் சகோதரனும் உங்களை போன்று இனவாத முத்திரையுடன் அலைந்து திரியவுமில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். சகோ.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு முதலமைச்சர் கிடைக்கும் என்று வாக்களித்த சகல மக்களும் அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுகொண்டனர்.

இனிவரும் காலங்களிலாவது மக்களிடம் இனவாதம் பேசி மக்களை உசுப்பி விடுவதை தவிர்த்து சரியான பாதையில் ஜனநாயகமாக, சிறந்த தலைமைத்துவத்தால் வளர்க்கப்பட்ட போராளியாக நடந்து கொண்டு உங்கள் மக்களின் பிரச்சினைகளையும்,அபிவிருத்திகளையும் பெற்றுகொடுக்க முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன அடிக்கடி வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடொன்றில் ராஜபக்சவினருக்கு சொந்தமான இரகசியமான வங்கிக்கணக்கில் 18 பில்லியன் டொலர்கள் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பல முறை ஊடக சந்திப்புகளின் போது குறிப்பிட்டிருந்தார்.

இதனால், இதற்கு எதிராக முதலில் வழக்கு தாக்கல் செய்ய மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


அம்பாரை தொகுயில் மூன்று எம்.பிக்கள் இருக்கின்றார்கள் இவர்களின் வேலை என்ன, தன்ட தன்ட தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை இனம்கண்டு அதற்குரிய மாதிரி அனுகவேண்டியவர்களிடம் அனுகி பல அமைச்சர்களை இங்கே அழைத்து வந்து சேவையை செய்வதுதான் அவர்களுடைய கடமை.

ஆனால் தங்களுடைய தொகுதியில் கக்கூசி கட்டுவதற்கு கூட ஆலோசனை கூட்டம் போடுவது என்றாலும் சரிதான், சேவை செய்வது என்றாலும் சரிதான், அதனை திறப்பது என்றாலும் சரிதான் தலைவர்தான் அதற்கு வரவேண்டும் என்று நினைப்பதென்பது இவர்களை இவர்களே தாழ்த்திக்கொள்வதற்கு சமமாகும்.

உதாரணத்துக்கு, கல்முனை அபிவிருத்தியை பற்றி தலைவர் ஹக்கீமுக்கு தெறிவதைவிட ஹரீஸ் எம்பி அவர்களுக்கு நன்றாகவே தெறியும், அவரை சதந்திரமாக இயங்கவிட்டால் பல அமைச்சர்களை இங்கே கொண்டுவந்து சேவைகளை செய்வார், அதனூடாக பல அபிவிருத்திகளை மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்.
ஆனால் இங்கே நடப்பது என்ன?

ஹரீஸ் எம்பியும் மற்ற எம்பிமாரும் ஒரு வபா மாதிரியும் தலைவர்தான் அவருக்கு வழிகாட்டுவது மாதிரியும் சகலதுக்கும் அவர்தான் வரவேண்டும் என்றும் நினைப்பதும்  இந்த ஊர் மக்களுக்கு செய்யும் பெறுத்த அநியாயமாகும்.

ஹரீஸ் எம்பி அவர்களையோ மற்ற எம்பிமாரையோ சுதந்திரமாக இயங்க விட்டால் நிச்சயமாக அவர்களுடைய பதவியை பயன்படுத்தி, பல துறைசார்ந்த  அமைச்சர்களை இங்கே அழைத்துவந்து சேவைகளை செய்வார் என்பதே உண்மையாகும். தங்களுடைய அமைச்சிக்குள் மட்டும்தான் அம்பாரை மாவட்டம் முழுக்க சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களோ அல்லது தலைவர் ஹக்கீம் அவர்களோ தங்களிடமுள்ள அமைச்சிகளினூடாக முழு இலங்கைக்கும் சேவை செய்வேண்டும் என்று கூறுவது உண்மையாக இருந்தால், ஏன் மற்ற துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் சேவை நமக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்று இந்த மக்கள் யோசித்து பார்த்தார்களா?
ஏன் மற்ற அமைச்சர்கள் இங்கே அழைத்து வரப்படுவதில்லை என்று பார்த்தால், நான் கூறும் காரணம்தான் அதற்கு காரணமாகும்.

தன்னுடைய கட்சியையும் அதன் மூலம் பெற்றுள்ள தலைவர் பதவியையும் காப்பாற்றுவதற்காக அவர் ஆடும் நாடகத்துக்கு நமது பகுதி மக்கள் பழியாகின்றார்கள், இதனை தெறிந்து கொண்டும் நமது எம்பிமார் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

நிர்வாகம் செய்வதற்கு ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் போன்றோருக்கு தெறியாத ஒன்றல்ல அவர்களும் படித்தவர்கள்தான், எப்படி ஹக்கீம் அவர்கள் இந்த கட்சி தலைவராக வருவதற்கு முன் இருந்தாரோ அதைப்போன்றுதான் இவர்களும் அனுபவத்தினூடாக அரசியலை கற்றவர்கள்.
இவர்களை சுயமாக இயங்கவிட்டால் நிச்சயமாக பல அபிவிருத்திகளை நமது பகுதி அடையும் என்பதே உண்மையாகும்.

சரி, இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்...தலைவருக்குள் உள்ள பயம்தான் காரணமாகும்.
இந்த கட்சியிலே இருந்த அதாவுள்ளா, ஹிஸ்புள்ளா, ரிசாட், அமீரலி, மறைந்த அன்வர் இஸ்மாயில் போன்றவர்கள் கட்சியில் இருக்கும் போதும் தனது பகுதிகளுக்கு தன்னிச்சையாக இயங்கி பல சேவைகளை செய்தவர்கள், அதன் காரணமாக கட்சியை விட்டு பிரிந்து சென்றாலும் அந்தந்த பகுதியை மக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

இப்படியொரு தவறு இனிமேலும் நடக்கக்கூடாது என்ற பயத்தின் காரணமாகவும், கல்முனை தொகுதியும் பறிபோய்விடக்கூடாது என்ற காரணத்தாலும் இவர்கள் யாரும் தன்னிச்சையாக இயங்குவதற்கு தலைவர் அனுமதிப்பதில்லை,
அப்படித்தான் அவர்கள் தன்னிச்சையாக இயங்க முடிவெடுத்து செயல்பட்டால் தொகுதி அபிவிருத்தி அடையும் ஆனால் அவர்களுக்கு அடுத்தமுறை கட்சியில் சீட் கிடைக்காது இதுதான் உண்மையாகும்.
(உதாரணம் முன்னால் மேயர் சிராஸின் பதவி பறிப்பு)

இந்த உள்நோக்கத்தை வைத்துத்தான் தலைவர் அவர்கள்  செயல்படுகின்றார் என்பது அம்பாரை மாவட்ட மூன்று எம்பிமாருக்கும் தெறியும், அவர்களுக்கு தொகுதியின் அபிவிருத்தியை விட தலைவரின் மனம் நோகக்கூடாது என்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.
அதற்காகத்தான் கக்கூசி திறப்பதென்றாலும் தலைவர் வரவேண்டும் என்று அவர்கள் துடியாய் துடிக்கின்றார்கள்.

இது அவர்களின் தவறல்ல, மாறாக மக்களின் அறியாமை என்பதே உண்மையாகும். முஸ்லிம் காங்கிரஸில் வந்தால்தான் மக்கள் வோட்டுபோடுவார்கள் என்ற நிலை இருக்கும் போது அவர்கள் எதனை குறிவைப்பார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெறிந்த விடயம்தான்.

தலைவரை மீறி இங்கே செயல்பட்டுவிட்டு இதன் காரணமாக அவர் கட்சியை விட்டு நீக்கிவிட்டால் பிறகு மக்களிடம் வந்தால் தோல்விதான் மிஞ்சும், அதை விட தலைவரின் மனம் நோகாமல் நடப்பதே மேல் என்று அவர்கள் செயல்படுவது தவறாகாது.
இவர்களுடை இந்த போட்டியினால் பாதிக்கப்படுவது யார்?
என்பதை மக்கள் அறிந்ததாகவும் தெறியவில்லை, அதனால் பாதிக்கப்படுவதும் நாம்தான் என்றும் மக்களுக்கும் புரியவில்லை.

ஆகவே மக்களே சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு எம்பியை தெறிவு செய்யுங்கள் நிச்சயமாக பல அபிவிருத்திகள் நமது பகுதியை அலங்கரிக்கும் என்பதே நிச்சயமானதும் சத்தியமான உண்மையுமாகும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..


இந்தோனேஷியா சுமாத்திரா தீவில், இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், வானிலை அவதான நிலையம் சுனாமி எச்சரிச்சை விடுத்துள்ளது.

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன்கூடிய மழை அல்லது புயல்காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டமையானது சிலருக்கு அநீதியான பாதிப்பை எற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அபராதம் அதிகரிக்கப்பட்டமையானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போன்ற சிறு தொழில்களில் ஈடுபடுவோருக்கு அநீதியானது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தப்பட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.


(எம்.சி.நஜிமுதீன்)

தேசிய பாடசாலையொன்றில் 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு இவ்வருடம்  முடிவடைவதற்குள் இடமாற்றம் வழங்குவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் அவ்வமைச்சு ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

எனவே ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் அவ்வவ் மாகாணங்களில் ”ஆசிரிய இடமாற்ற சபை” நிறுவுவதற்கும் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே அச்சபையூடாக குறித்த இடமாற்றங்கள் நடைபெறவுள்ளது. மேலும் குறித்த ஆசிரிய இடமாற்ற நடவடிக்கைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பொதுபல சேனாவின் ஸ்தாபகர் மற்றும்  முன்னாள் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கிரம விமலஜோதி தேர்ருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமன ஆவணத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்துள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன,
ஒட்டுமொத்த பௌத்த சமூகத்தினதும் நன்மைகருதி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விரிவான குறிக்கோளுடன் செயற்படும் கிரம விமலஜோதி, தேரரின் புத்த சாசனத்திற்கான மற்றும் சமூக செயற்பணியினை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி ,அவரது தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் நிறைவேற்றி முன்னுதாரணமாக செயற்படும் ஒருவர் என குறிப்பிட்டார். 
விசேட சமய பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு பௌத்த சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், சிறந்த அறிவும், ஒழுக்கமும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது அர்ப்பணிப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.
உன்னதமான பௌத்த தேரர்களின்  கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் பொருட்டு தேரர்கள்  செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிறந்த நடத்தையும், கௌரவமும் கொண்ட பிக்குமாரே இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.
தெஹிவல நெதிமால பௌத்த கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி, வெஹெரஹேன சிறி ரேவத்த மகா பிரிவெனாவின் பொறுப்பாளர், தென்னிலங்கைக்கான பிரதான சங்கநாயக்கர் வண.கிரம விமலஜோதி தேரருக்கு ஜனாதிபதி நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார்.
தேரர் அவர்களால் எழுதப்பட்ட தர்ம போதனை நூல்களும் ஜனாதிபதியிட்ம கையளிக்கப்பட்டன.

அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் வீடுகளை இழந்த மக்களுக்கான காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டது,

சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கத்தின் போதனையாளர் அலவ்வே குணரத்தன தேரரினால் அந்த மக்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான நிவாரணப் கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் புண்ணிய நிகழ்வின் தலைமைப் பொறுப்பை வகித்ததுடன், தெவுந்தர சஜமகா விகாராதிபதி ஸ்ரீ கல்யாணவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்கர் தெவுந்தர சிறி சுனந்த நாயக்க தேரர், பேராசிரியர் மிதிகம சோரத்த நாயக்கதேரர், மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கேகாலை ரத்தனசார நாயக்க தேரர் உள்ளிட்ட மாகாணத்தின் மகாசங்கத்தினரும், பூர்வாராம ரஜமகா விகாரையின் கொடையாளர் சபையின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர மாகாண மக்கள் பிரதிநிதிகள் பிரதேச மக்கள் உள்ளிட்டோர் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.


கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சிமன்ற திருத்த சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமது கட்சியினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களும், தொந்தரவுகளும் கொடுக்கப்பட்டால்,எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த முடிவை அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்கள் இருப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 35 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை பலத்தை கவனத்தில் கொள்ளாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை புறந்தள்ளி விட்டு தன்னிச்சையாக செயற்பட்டுள்ளது என பிரதமர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினருக்கு நடக்கும் அநீதிகள் இதே விதமாக தொடர்ந்தால், எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் என பிரதமர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தோனேஷியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில்  இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ள உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் தற்போதைக்கு கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளதாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் வினவியேபாேதே அவர் இதைனத் தெரிவித்தார். 


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சி முயற்சி செய்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிணை முறி விவகாரம் நடைபெற்ற போது மத்திய வங்கியானது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ச்சுன் மகேந்திரனை நியமிக்கப்பட்டு, அவரின் செயற்பாட்டில் காலத்தில் தான் இந்த பிணைமுறை விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் இதனை முதன்மைப்படுத்தி, பிரதம் மீது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருகின்றனர் என தெரியவருகிறது.

இந்த தீர்மானத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் உதவியினையும் நாடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் தனது பதவியினை துறந்திருந்தார். இது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியிருந்தது.

இதன் அடுத்த கட்டமாக பிரதமர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


சற்றுமுன் நீர்கொழும்பில் விஷேட அதிரடிப்படை ஜீப் வண்டி மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதீக விபரம் விரைவில்...


எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து கூட்டு எதிர்க்கட்சி கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது எனவும் அதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் கீழ் மட்ட அரசியல்வாதிகள் இணங்க மாட்டார்கள் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியின் தரப்பிலிருந்தும் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் கீழ் மட்ட அரசியல் பங்குற்றாத மகிந்த ராஜபக்ச, தற்போது அவற்றில் பங்கேற்று வருவதாகவும் தெரியவருகிறது.


பாரிய ஊழல், மோசடிகள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலை, வெலிகடை சிறைச்சாலை பட்டியல் படுகொலை, ரத்துபஸ்பல பொதுமக்கள் கொலை போன்ற பாரதூரமான குற்றச் செயல்கள் சம்பந்தமாக வழக்குகளை துரிதப்படுத்தி, அவற்றுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் போது தடையேற்படுத்துவோர் யாராக இருந்தாலும் அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ள மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சாதகமற்ற நிலைமை உருவாகியுள்ளது.

வாக்குறுதி வழங்கியபடி ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊழல்வாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் தண்டனை வழங்கும் என்ற கடும் நம்பிக்கை மக்களுக்கு இருந்தாகவும் அது தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் தொகுதி அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல்,மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக இருப்பதால், மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலவுவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியமையானது அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இந்த நிலைமையை அதே நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்திற்கு நெருக்கமான அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சகல விடயங்கள் சம்பந்தமாகவும் பிரதமர் , குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கத்தின் பிரதானிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.சமுர்த்தி நலன் குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டி, கம்உதாவ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

சமுர்த்தி நலன் திட்டத்தை குறைக்கவோ அதனை வரையறுக்கவோ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசாங்கம் சமுர்த்தி நலனை குறைத்துள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் கொள்கை வகுப்புக்களை மேற்கொள்கின்றது.சமுர்த்தி நலன் பெற்றுக்கொள்ளக் கூடிய பெற்றுக்கொள்ளாத பலர் நாட்டில் இருக்கின்றார்கள்.

சமுர்த்தி நலன்கள் வழங்குவதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர நலன்கள் குறைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம், அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜே. வி. பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில், சட்டமா அதிபர் திணைக்களம் மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் பணிகள் ஒருபோதும் முடக்கப்படக் கூடாது என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க யாருக்கும் முடியாது. நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளனர். மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து விட்டனர். இதன்பிறகும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்வதற்காக, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட SupremeSAT - 1 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் திட்டம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்காகவே ரோஹித அழைக்கப்பட்டுள்ளார்.

சுப்ரிம் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவில் பிரதான பொறியியலாளராக ரோஹித செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுப்ரிம்செட் செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக 320 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை எனவும், அரசாங்க பணம் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகிய போதிலும் அவருக்கு அமைச்சருக்கான சிறப்புரிமைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதடினப்படையில், ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுக்கு நியமித்த பணியாளர்கள் நீக்கப்பட மாட்டார்கள்.

ஒரு அமைச்சருக்கு இரண்டு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால், ஒரு அமைச்சுக்கான பணியாளர்களை நியமிக்க முடியும் என்பதால், ரவி கருணாநாயக்க நியமித்த பணியாளர்கள் நீக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள்.

இதனை தவிர ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.


க கமலனாதன் -
எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வினைச்சொற்கள் விபரித்தல் என்ற பெயரில் ஜுலம்பிடியே தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் இந்நாட்டின் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு தமிழ் சிங்கள மக்களுக்கும் இடையில் இந்த புத்தகம் ஒரு உறவை ஏற்படுத்தும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு யாழ்ப்பாணத்தில் பிக்குமார்கள் பாடசாலைகளுக்கு சென்று சிங்களம் கற்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றார்கள். ஆனால் அரசாங்கத்தின் மொழிக்கொள்கை அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மாற்றமடைந்த காரணத்தினால் துரதிஷ்ட வசமாக மேற்படி சிங்கள மொழி கற்பிக்கும் செயற்பாடுகள் தடைபட்டு போயின.
இந்த பணியை முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்சவும் நானும் இணைந்து நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என நாட்டிற்கான ஒரு பொதுப்பாதையை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் பேருவளையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக பணிப்பாளர் ஆஸப் அஹமட் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் விருந்து உபசாரத்தில் கலந்துகொண்ட அவர் அதனை தொடர்ந்து தற்போது சுகயீனமுற்றுள்ள சீனன் கோட்டையைச் சேர்ந்த பிரபல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளரான முகம்மது ரவூபின் இல்லத்திற்கு சென்று சுகம் விசாரித்தார். முன்னாள் பேருவளை நகரபிதா மர்ஜான் அஸ்மி பளில் உட்பட பல பிரமுகர்களும் முன்னாள் ஜனாதிபதியுடன் வருகை தந்தனர்.

 பேருவளை முன்னாள் நகர பிதாவும் பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள் அமைப்பாளருமான மர்ஹும் எம்.எஸ்.எம். பளில் ஹாஜியாருடன் இணைந்து தேர்தல் காலத்தில் தனது வெற்றிக்காகவும் கட்சியின் முன்னேற்றத்ற்காகவும் முகம்மது ரவூப் செய்த பங்களிப்பை இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞாபகமூட்டினார் .

நோய்வாய்ப்பட்டுள்ள தன்னை சந்தித்து சுகம் விசாரிக்க , தனது இல்லத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகம்மது ரவூப் இதன்போது நன்றி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்தபட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பலவீனமே தங்கத்தின் விலை குறைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம் ஆகும்.


நவாஸ் சௌபி

முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேர் படந்திருக்கும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இவ்விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் இருக்கிறது.

மாடு வரும் முன் வருகின்ற மணியோசை போன்று, தேர்தல் வருவதற்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இவ்வாறான விமர்சனங்கள் வருவதும் வழக்கமே.

கடந்த பாராளுமன்றத் தேர்தல்காலத்திலும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, என்ற பிரசாரங்களை முன்வைத்து அதனை விமர்சித்தார்கள். ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் தலைகீழாக புரட்டிப் போட்டதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் முடிவு, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்திருந்தது.

இப்படியான பிரசாரங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில்தான், முஸ்லிம் காங்கிரஸ் அதன் மக்கள் பலத்தை ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் மூலமும் நிரூபித்தும் வருகிறது. இந்நிலையில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற உள்@ராட்சித் தேர்தலை அல்லது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதில் தயக்கம் கொள்வதாக அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கு காரணமாக இருப்பது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இறுதியாக விலகிச் சென்றிருக்கும் பஷீர் சேகுதாவுத் மற்றும் ஹஸன் அலி ஆகிய இருவரையும் வைத்து எதிர்வருகின்ற தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராக களமிறங்கும் என்ற ஒரு ஊகமே ஆகும்.

இங்கு, முஸ்லிம் கூட்டமைப்பு என்பது ஒரு பெயர்பலகை மட்டும்தான். இதுவரைகாலமும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனித்தனியாக அரசியல் செய்தவர்களும், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றதால் தேர்தலில் வெற்றிபெறமுடியாமல் தோற்றுப்போனவர்களும், முஸ்லிம் சமூக அரசியலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை அடியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அதன் நிரந்தர எதிரிகளும் இறுதியாகச் செய்ய நினைக்கும் ஒரு மொத்த வியாபார அரசியல்தான் இந்த முஸ்லிம் கூட்டமைப்பு என்ற மாயையாகும்.

முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி வழங்கும் ஒரு அங்கீகாரத்தால் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகப் போவதில்லை. அப்படி ஒரு அங்கீகாரத்தைக் கொடுப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்புக்குள் தலைகாட்டும் அரசியல் முகங்களை முஸ்லிம் மக்கள் அறியாதவர்களுமல்ல, அவர்களின் சுயநல அரசியல் தெரியாதவர்களுமல்ல. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராக அரசியல் செய்கின்ற நான்கு பேர் தாமாக கூட்டுச் சேர்வதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு என்று பெயர்வைத்தால், அது ஒருபோதும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷையாக மாறிவிடாது.

இந்த முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோஷத்தை முன்வைப்பவர்கள் யாரும் எமது அரசியலுக்கு புதியவர்களும் அல்ல. இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் முகவரி பெற்றவர்கள்தான். பழைய பாணத்தை புதிய போத்தலில் அடைப்பது போன்று,  முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அரசியல் மாயை இருக்கிறது. எவ்வளவுதான் போத்தல் புதிதாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பாணம் மக்களுக்குப் புளித்துப் போனதுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

சமூக அரசியலுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் செயற்படவில்லை என்ற சமூக நோக்கோடு இவர்கள் யாரும் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அதில் எத்தகைய நேர்மையும் இல்லை. தங்களின் சுயநலமான பதவி ஆசைகள் நிறைவேறாத போது முஸ்லிம்காங்கிரஸிலிருந்து விலகிவிட்டு, அந்தக் காரணத்தை வெளியில் தெரியாதவாறு மறைப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு எனும் வெறும் போர்வையால் தங்களின் தலைகளை  மூடிக்கொண்டு மக்களை ஏமாற்றும் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிக்கொள்கின்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸையும்  அதன் தலைமையையும் விமர்சித்தால் உடனே தாங்கள் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அரசியல்வாதிகள் ஆகிவிட்டோம் என்று எண்ணுகின்ற ஒரு மனோநிலை இருக்கின்றது. ஆனால் இவர்கள் யார் என்று மக்கள் இவர்கள் ஒவ்வொருவரையும் அளந்து வைத்திருப்பதை இவர்கள் அறியவில்லை போலும்.

ஆக, முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோஷத்தின் பின்னாலுள்ள தேவை என்னவென்றால், பேரம் பேசுவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு பேராபத்தை விளைவிக்ககூடிய பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அதன் மூலம் கிடைக்கின்ற வரப் பிரசாதங்களான, பாராளுமன்றக் கதிரைகளையும் அமைச்சுப் பதிவிகளையும் தோற்றுப்போனவர்கள் பெற்றுக்கொள்வதே ஆகும்.

இது நிறைவேற வேண்டுமானால், இன்று முஸ்லிம் சமூகத்தின் ஏக கட்சியாக முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சமூகத்திற்கு எதிரியாகக் காட்டி, அக்கட்சியின் வாக்கு பலத்தைச் சரியச் செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.

எனவே, கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனவர்வளும் எதிர்வருகின்ற தேர்தலில் தோற்றுப் போக இருக்கின்றவர்களும் தங்கள் கதிரைகளைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாக உருவாக்க நினைக்கும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு காடு வெட்டி பாதை எடுக்கிறார்கள். பழைய இரும்பைக் கொண்டு புதிய கட்;டடத்தை கட்டப்பார்க்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் அங்கீகாரத்தோடும், மக்களின் பலத்தோடும் முஸ்லிம் சமூக அரசியலுக்காக அடையாளம் பெற்ற ஒரு பேரியக்கமாக அதன் பணிகளை மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் செய்துகொண்டே வருகின்றது. இந்நிலையில், எதிர்வருகின்ற தேர்தல் எதுவானாலும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ள மக்கள் பலத்துடன் தயாராகவே இருக்கிறது.

இப்படி, முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம்பெற்ற நவம்பர் 1988 காலப்பகுதியிலிருந்து இதுவரை அது எதிர்கொண்ட தேர்தல்கள் எதுவும் மிகச் சாமானியமாக நடந்தவை அல்ல. அவை ஒவ்வொரு தேர்தல்களும் தேசிய அரசியலின் பெரும் சூழ்ச்சிகளுக்குள்ளும் முஸ்லிம் சமூகத்தின் எதிர் அரசியல் செய்கின்றவர்களின் பெரும் சதிகளுக்குள்ளும் வெற்றிகண்டுவந்த வரலாற்றுத் தேர்தல்களாகவே இருக்கின்றன.

குறிப்பாக இதுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட தேர்தல்களை பின்னோக்கிப் பார்த்தால், அவை ஒவ்வொன்றினதும் வரலாறு உயிர் இழப்புகளாலும் இரத்தம் வடிந்த உழைப்புகளாலும் ஆனதாகவே இருக்கிறது.

1988 இல் நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஆயுத முனையில் நடைபெ;றற போது, வேட்பாளர்கள் உயிரை தியாகம் செய்வதாக சத்தியம் செய்தே வேட்பு மனுவில் கையெழுத்திட்டு அத்தேர்தலை டம்மிப் பெயர்களில் எதிர்கொண்டார்கள். மறைந்த தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ‘உங்களில் யார் மௌத்தாகத் தயாரானவர்கள்?’ என்று கேட்டே அதற்கு துணிந்தவர்களை வேட்பாளர்களாக இட்டிருந்தார்.

அந்த மாகாணசபைக் காலத்தில், மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த சம்மாந்துறை எம்.வை மன்சூர், அக்கரைப்பற்று அலி உதுமான் ஆகியோர் ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகளுக்கு தங்கள் உயிர்களைப் பறிகொடுத்தும் இக்கட்சி மீதான பற்றுதலைக் காட்டியிருக்கின்றார்கள்.

மேலும், 1994 இல் நடைபெற்ற  உள்@ராட்சிமன்றத் தேர்தலில், “அம்பாறை மாவட்டத்தில் ஒரு சபையைக்கூட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றாதுவிடுமாக இருந்தால் நான் எனது பாராளுமன்றப் பதவியை இராஜினாமா செய்துவிடுவேன்” என்று பெரும் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரஃப் அவர்கள் மேடையில் பிரசாரம் செய்து அளித்த வாக்குறுதியை, நிந்தவூர் பிரதேச சபை தோற்றதும், உடனே தனது பாராளுமன்ற பதவியை சொன்னபடி இராஜினாமச் செய்து காட்டினார்.


இந்தவரிசையில், கடந்த 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும் நாம்  நினைவில் கொள்ள வேண்டும். திடீரெனத் தோன்றிய மின்னல் போன்று தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தானே கேட்பதாக எடுத்த முடிவு அமைந்திருந்தது. அத்தேர்தலில் தன்னோடு சேர்த்து கூடவே, பஷீர் சேகுதாவுத் மற்றும் ஹஸன் அலி ஆகியோரையும் இணைத்துக்கொண்டு தங்களது பாராளுமன்ற பதவிகளைவிட்டு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கிய அதிரடி முடிவாக அத்தேர்தல் அமையப்பெற்றிருந்தது.

கிழக்கு மாகாணம் பிரிந்த நிலையில் முதலாவதாக நடைபெற்ற அத்தேர்தலில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை வரலாற்றில் நாம் முதலில் பெறவேண்டும் என்ற முழுநோக்கோடும்தான் அம்முடிவு அப்படி அதிரடியாக எடுக்கப்பட்டது.

அவ்வாறு. ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கிழக்கில் பெற்றால் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கு இன்னும் அதிகரித்துவிடும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதித்துவிடும் என்று முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுப்பது போல் அதற்கு எதிராக சதி செய்தவர்கள்தான் இன்று முஸ்லிம் கூட்டமைப்பு என்று தலை நீட்டுகின்றார்கள்.

ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முதலமைச்சரை பெறவேண்டும் என்ற தனது இலக்கை தற்போது அடைந்துகாட்டி இருக்கிறது. மாத்திரமல்லாமல் கிழக்கில் ஒரு முதலமைச்சரை கொடுத்தால் தனக்கு சவாலாக ஆகிவிடும் என்று தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கிலுள்ள ஒருவருக்கு முதலமை;சசர் பதவியை கொடுக்க விரும்பாது இருக்கிறார் என்றும் இதனை பலவிதமாக பேசிய வாய்களையும் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்மூலம் இறுக மூடவைத்திருக்கிறார்.

இப்படி, முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எதிர்கொண்ட 3 உள்@ராட்சித் தேர்தல்கள், 3 மாகாண சபைத் தேர்தல்கள், 7 பாராளுமன்றத் தேர்தல்கள் அதுபோன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்த 5 ஜனாதிபதித் தேர்தல்களின் கடந்தகால வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்பவர்கள் யாரும் தேர்தல்களைக் கண்டு முஸ்லிம் காங்கிரஸ் அச்சப்படுகிறது என்று விமர்சனம் செய்யமாட்டார்கள்.

இதற்கமைய, எதிர்வருகின்ற தேர்தல் எதுவானாலும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தீவிர முடிவுகளை எடுத்து முஸ்லிம் காங்கிரஸ் அதன் வியூகங்களை வகுத்து தேர்தலை வெற்றிகொள்ளும் பலத்துடன் என்றும் இருக்கிறது. மாறாக தேர்தலை எதிர்கொள்ள திராணியற்று அது ஒருபோதும் புறமுதுகு காட்டி பயந்தோடுகின்ற நிலையில் இல்லை.


பிரித்தானியாவின் சதர்ன் ஹெமிஸ்பயர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் லியாம் டெர்பிஷையர் தூங்கினால் மரணமடையும் வினோத நோயால் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார்.

பிறக்கும் போது இவரது உடல்நிலையை ஆய்வு செய்த, மருத்துவர்கள், சிசிஹெச்எஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 1500 பேரை மட்டுமே தாக்கியுள்ள இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை அவர்கள் தூங்குவதை மறந்து விடும் என்றும் இதனால் இதயம், நுரையீரல் செயல் இழந்து நோயாளி இறக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

லியாம் பிறந்ததில் இருந்து ஜி.எம்.எஸ். என்ற கருவி மூலம் பெற்றோர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மற்ற மாணவர்கள் போல் பாடசாலைகளுக்கு செல்லும் லியாம், தூக்கம் வரும்போது மட்டும் பெற்றோரின் கண்காணிப்புடன் செயற்கை சுவாசம் மூலம் தூங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் அவர் பதவி விலகுவார் என நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார். இதனையடுத்து அந்த பதவிக்கு திலக் மாரப்பன நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலக் மாரப்பன தற்போது அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சராக பதவியில் இருக்கிறார்.

எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து, பின்னர் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமா ?
எம்மிடம் கேளுங்கள் சொல்லித்தருகின்றோம் என்கிறார் ராஜித சேனாரத்தின....!

அன்று நானும் எனது குழுவினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை நேரில் சந்தித்திருந்தோம், அப்போது நாங்கள் எழப்பிய கேள்விகளுக்கு பதில் தந்திருந்தார், அந்த நேரத்தில் ஒருகட்டத்தில் எனது ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு ராஜித சேனாரத்தின போன்றவர்கள்தான் உள்ளிருந்து கொண்டு இதற்கு சதி செய்தவர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டார்.

அளுத்கம பிரச்சினை நடக்கும் போது நானும் (மஹிந்த), பசீலும் கோத்தாவும் நாட்டில் இருக்கவில்லை, அந்த நேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்தவர் இன்றய ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான்  இருந்தார் என்றும், அவர் நினைத்திருந்தால் அன்று இந்த பிரச்சினையை உடனே அடக்கியிருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

வெளிநாட்டு பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு வந்த நான்(மஹிந்த)உடனடியாக சென்றது அளுத்கமைக்குத்தான், அங்கே சென்ற நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கினேன், இருந்தாலும் உள்ளிருந்து கொண்டே இவர்கள் சதி செய்தார்கள் என்பதை  நான் அறியாதது உண்மைதான்.
இருந்தாலும் இவர்களை நான் நம்பியிருந்தேன், இவர்கள் பல நாட்களுக்கு முன்னமே என்னை வீழ்த்துவதற்கு திட்டமிட்டு செயல்பட்டார்கள் என்ற விடயத்தையும்  நான் அறிந்திருக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் போது எனக்கு எதிராக இன்றய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அதே நேரம் அவர் ஒரு நாளில் எடுத்த தீர்மானமாகவும் அது இருக்கவும் முடியாது, மாறாக பல நாட்களுக்கு முன்னமே மிக ரகசியமாக இந்த தீர்மானத்தை எடுத்து செயல்படுத்தியுள்ளார்கள்.
என்னோடு கூட இருந்து சிரித்து சிரித்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் எனக்கு எதிராக போட்டியிட்டவர்களை இனம்கான நான் தவறியது எனது தவறுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இப்படிப்பட்ட இவர்கள்தான் அரசியல் லாபத்துக்காக முஸ்லிம்களையும் என்னையும், எனது ஆட்சியையும் வீழ்த்துவதற்கு உள்ளிருந்துகொண்டே முயற்சி செய்து வந்தவர்கள் ஆவார்கள்,
இவர்கள் அளுத்கம பிரச்சினையை ஊதி பெருப்பித்துவிட்டு அதனை தங்களுக்கு சார்பாக பயன்படுத்திகொண்டவர்கள், இவர்களா முஸ்லிம்களுக்கு நியாத்தை பெற்றுத்தறுவார்கள் என்று யோசியுங்கள் என்றும் எங்களிடம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் கேள்வி எழப்பினார்.

அவருடைய இந்த கேள்விக்கு பதில் தருவது போன்றே இன்று ராஜித சேனாரத்த அவர்கள் அனுராதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது மேற்கூறிய இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஆட்சியிலிருக்கும் ஒரு அரசாங்கத்தை அசைக்க வேண்டும் என்றால் அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை எம்மிடம் கேளுங்கள், அரசாங்கத்தை எவ்வாறு திட்டமிட்டு மாற்றுவது என்பதை நாங்கள் சொல்லித்தறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இந்த கூற்றுக்குள் ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இவர்களுடைய சதி நாடகத்துக்கு முஸ்லிம் சமூகத்தை பழியாக்கியுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

ஆகவே முஸ்லிம் மக்களே இதனை ஆழமாக சிந்தித்து பாருங்கள் உண்மை புரியும், எதிரி யார் நண்பன் யார் என்று நாம் புரிந்து கொள்ளாதவரை ஏமாற்றியவர்களின் காட்டில் மழைதான்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை....

MARI themes

Powered by Blogger.